பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - பூர்ணசந்திரோதயம்-3 சொல்லைக் கேட்டும், நான் உங்கள் விஷயத்தில் இப்படி இளகிப் போனது என்னுடைய குற்றமாகுமா? நீங்களே காரணபூதராக இருந்து உண்டாக்கிவிட்டதான என்னுடைய பரமசங்கடமான நிலைமையை நான் உங்களிடம் வெளியிடுவதைப் பற்றி என்னை நீங்கள் கண்டிப்பது தருமமாகுமா?' என்று மிக மிக உருக்கமாகக் கூறி நைந்து பாகுபோல இளகிச் சோர்ந்து அப்படியே வேரற்ற மரம்போலப் பொத் தென்று தரையில் விழுந்து கோவெனக் கதறி அழ ஆரம்பித்தாள். அவளது நடலத்தையும் லாகலங்களையும் கண்ட கலியாணசுந்தரத்தின் எண்சாண் உடம்பும் ஒரு சாணாகக் குன்றியது. சகிக்கமாட்டாத வெட்கமும், சங்கடமும், மனக் குழப்பமும் எழுந்து அவனை நிரம்பவும் கலவரத்தில் ஆழ்த்த அந்த நிலைமையில் அவன் உடனே தனது பார்வையை நாற்புறங்களிலும் திருப்பி ஆராய்ந்து பார்த்து, ஜனங்கள் எவரும் தங்களைக் கவனிக்கவில்லை என்று நிச்சயித்துக் கொண்டது சிறிதளவு ஆறுதல் உண்டாகியது. அவளது நிலைமையைக் கண்டு, அவன் உண்மையிலேயே பிரமித்துக் கலகலத்துப்போய் விட்டான். அவளது உருக்கமான சொற்களும் ஆவேசமான செய்கைகளும், மோகாந்தகரமான பார்வையும், மகா பரிதாபகாரமான தோற்றமும் ஒன்றுகூடி அவனது மனதில் ஊடுருவிப் பாய்ந்து அவனது ஹிருதயத்தைப் புண்படுத்தி விட்டன. அவன் அதிக யூகமும் புத்தி நுட்பமும் வாய்ந்தவன் ஆனாலும் உலகத்தில் மோசங்களும், வேஷங்களும், சாகசக்கியங்களும், ஏமாற்றமும், தந்திரங்களும் எந்தெந்த இடத்தில் இருக்கக் கூடுமென்பதை அவன் அவ்வளவாக அனுபவத்தில் கண்டறியாவன். ஆகையால், அந்தப் பெண் அவ்வளவு தூரம் நடித்ததெல்லாம் அநேகமாய் உண்மையாக இருக்கும் என்றே அவன் நினைத்தான். ஆனாலும் கூத்தாடிச்சியின் வகுப்பைச் சேர்ந்தவர்கள் நாடகத்தில் வேஷம் போட்டு நடித்து நடித்துப் பழகுகிறவர்கள் ஆதலால், அதே வகுப்பைச் சேர்ந்தவர்களான அந்தப் பெண்ணும்