பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பூர்ணசந்திரோதயம்-3 வேடனது அம்பினால் அடிபட்டு மரண வேதனைப்பட்டுப் புரண்டு புரண்டுதவிக்கும் மணிப்புறாவைப் போல, நமது தனம் அப்போதும் தரையில் கிடந்து தனது உடம்பை முறுக்கிக் கொண்டு கல்லென்றும் முள்ளென்றும் பாராமல் விழுந்து புரண்டு தண்ணிர் சோரவிட்டு அழுது, "ஐயோ! என் உயிர் போய்விடும்போல இருக்கிறதே! நீங்கள் சொல்வதைக் கேட்கக் கேட்க எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்போல இருக்கிறதே! உங்கள் பேரில் என் மனசில் உண்டாகியிருக்கும் மையலானது, மரணதாகமாக என்னை வதைத்துக் கொன்று என் சித்தத்தைக் கட்டி இழுத்துக்கொண்டிருக்கும் இந்த நிலைமையில் நான் உங்களை மறக்கவும், பொறுமையாக இருக்கவும் நீங்கள் போதிப்பது காரியத்தில் சாதிக்கக் கூடியதா! உங்களை நான் இனி ஒரு நொடி நேரம் விட்டுப் பிரிந்து உயிரோடிருக்க முடியுமா? உங்களுடைய பிரியமெல்லாம் வேறொரு பெண்ணின் மேல் வீழ்ந்திருப்பதாக நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படியே இருக்கட்டும். அதைப் பற்றி என் மனம் சகிக்க முடியாத பொறாமை அடைந்தாலும், நான் அந்த விஷயத்தில் எப்படியாவது என் மனசை அடக்கிக் கொள்ளுகிறேன். நீங்கள் அந்தப் பெண்ணையே கலியாணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழுங்கள். அதில் நான் எவ்விதத்திலும் தலையிட்டு உங்களுடைய இன்பத்தைக் குலைப்பதில்லை. உங்களுடைய ஆயிசுகாலம் முழுவதும் நீங்கள் மகாபாக்கியவதியான அந்தப் பெண்ணை ஆனந்த சாகரத்தில் ஆழ்த்தப் போகிறீர்கள். நீங்கள் ஒரே தினம் என்னோடு சந்தோஷமாக இருந்தால், அதையே நான் பெருத்த மோrபதவியாக எண்ணி அவ்வளவோடு உங்களை மறந்து விடுகிறேன். அதுகூட உங்களுக்கு நீண்ட காலமாகத் தோன்றினால், கேவலம் ஒரு நாழிகை சாவகாசம் என்னை உங்களுடைய காதலுக்கு அருகமானவளாக ஏற்றுக் கொண்டால், அதையே நான் சாயுஜ்ய பதவியாக நினைத்து, என் ஆயுசுகாலத்துக்கும் போதுமானதாக எண்ணித் திருப்தி