பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பூர்ணசந்திரோதயம்-3 அவளுக்குப் பக்கத்தில் சலவைக்கல் மேடையின்மீது உட்கார்ந்தபடி கலியாணசுந்தரம் மருண்டு மருண்டு நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்து அன்னியர் யாராவது தங்களைக் கவனிக்கிறார்களா என்பதை ஆராய்ச்சி செய்தான். எவரும் அவ்விடத்தில் தென்படவும் இல்லை. அவர்களைப் பார்த்ததாகவும் தோன்றவில்லை. அதனால் ஒருவித ஆறுதலடைந்த அந்த யெளவனப் புருஷன் மறுபடியும் தனது பார்வையை அந்த மடந்தையின்பக்கமாகத் திருப்பினான். அப்போது தனம் தனது அழகிய விசாலமான கண்களை மெதுவாகத் திறந்து, வாஞ்சையும் இளக்கமும் வழிந்தோடிய பார்வையாக அவனைப் பார்த்து, "ஆகா! இப்படியே என் உயிர் போய்விடுமானால் அது பரமாநந்தமாக இருக்குமே! அடடா! நீங்கள் ஏன் என்னை வழிமறித்து நான் குளத்தில் விழுவதைத் தடுத்து இங்கே கொண்டு வந்தீர்கள்? நீங்கள் என் மனதில் மூட்டிய பெருநெருப்பும், வாதனைகளும் ஒரே நொடியில் தொலைந்து போகுமே! நான் இந்நேரம் தண்ணிரில் விழுந்து மாண்டுபோயிருப்பேனே! அநியாயமாக நீங்கள் என்னைத் தடுத்து என்துன்பங்களை வளர்த்தலாமா இது தருமமாகுமா?" என்றாள். அதைக் கேட்ட கலியாணசுந்தரம் பரமதுக்கமும் வேதனையும் அடைந்தவனாய், நிரம் பவும் இரக்கமாக அவளைப் பார்த்து, 'அம்மாதனம்! இன்னமும் அந்தப் டிேச்சை எடுத்துப் பேச எனக்குப் பிரியமில்லை. உன்னுடைய வார்த்தைகளினாலும் செய்கைகளினாலும் நீ ஏற்கெனவே என் மனசைப் புண்படுத்தி என்னை விசனக்கடலில் ஆழ்த்தி விட்டதன்றி என் மனசில் பெருத்த திகிலையும் உண்டாக்கி விட்டாய். இந்த இடத்தில் இனியும் நாம் இருப்பது சுத்தத் தவறு. ஆகையால், எழுந்திரு; நாம் உடனே புறப்பட்டு நம்முடைய ஜாகைக்குப் போய்ச் சேருவோம்' என்று மிகவும் இறைஞ்சிக் கூறினான். -