பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 43 அவள் தனது முகத்தை நிரம் பவும் விகாரமாகவும் பரிதாபகரமாகவும் தோற்றுவித்து கண்ணிர் துளிகள் மளமள வென்று உதிர, நிரம் பவும் ஏமாற்றம் அடைந்தவள்போல அவனைப் பார்த்து, "ஆகா! என்ன உங்களுடைய மனசு எதற்கும் இளகாத இறுகிய பாறையாக இருக்கிறதே! கேவலம் ஒரு நாழிகை நேரம் உங்களுடைய காதலுக்குப் பாத்திரமாக யோக்கியமற்றவளான நான் இவ்விடத்தை விட்டு நம்முடைய ஜாகைக்குப் போய் என்ன செய்யக் கிடக்கிறது? என்னை இப்படியே விட்டுவிடுங்கள். நான் மறுபடியும் போய்க் குளத்தில் விழுந்து இறந்துபோய் விடுகிறேன். என்னுடைய அற்ப வேண்டுகோளை நீங்கள் மறுக்கிறீர்களே! இப்படிப்பட்ட இழிவை அடைந்தும், நான் உயிர் வாழவேண்டுமா?’ என்று கூறி உருகி இளகி உட்கார்ந்து போனாள். கலியாணசுந்தரம் தான் என்ன செய்வது என்பதை அறியாமல் சிறிது நேரம் தயங்கியபின் தனது மனதை ஒரு வாறு திடப்படுத்திக் கொண்டு உருக்கமாகவும் உறுதியாகவும் அவளை உற்றுநோக்கி, ‘என்ன தனம்! நான் சொல்வதை நீ கேட்கமாட்டாயா? என்ன பிடிவாதம் இது? நீ பிரஸ்தாபிக்கும் காரியத்தைச் செய்ய நான், என் உயிர் போவதானாலும், இனங்கக் கூடியவனல்ல. அப்படிஇருக்க, என்னால் சாத்தியமில்லாத காரியத்தைச் செய்யும்படி நீ மேன்மேலும் என்னை வற்புறுத்துவதில் என்ன உபயோகம் 2 இதற்காக நீ குளத்தில் விழுந்து உயிரை விட்டு விடுவேன் என்று பிடிவாதம் செய்வது மதியீனமே அன்றி வேறல்ல. தான் விரும்பிய ஒரு புருஷன் தனக்கு இணங்கி வரவில்லை என்று இந்த உலகத்தில் இப்படி யாராவது குளத்தில் விழுந்து இறந்தது உண்டா? நீ சொல்வதும் செய்வதும் விந்தையாக இருக்கின்றனவே அன்றி வேறல்ல. எல்லாவற்றிற்கும் நாம் உடனே புறப்பட்டு நம்முடைய ஜாகைக்குப் போவோம். அங்கே போய் நீ இன்று முழுதும் நன்றாக யோசனை செய்து பார்; நாளையதினம் உன்