பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பூர்ணசந்திரோதயம்-3 மனம் சரியாய்ப் போகும்; எழுந்திரு. வீண் பிடிவாதம் பண்ணாதே. நாம் வந்து நிரம்பவும் அதிக நேரமாகிவிட்டது. இனிமேல் நாம் இங்கே இருப்பது ஒழுங்கல்ல' என்று அன்பாக வற்புறுத்திக் கூறியவண்ணம், அவளது கையைப் பிடித்து மெதுவாகத் தூக்க, அவள் தனது சாகசங்களெல்லாம் பயனற்றுப் போனதைக் கண்டு, மெதுவாக எழுந்தவளாய், 'நான் ஜாகைக்குப்போய்ச் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. நான் ஒரு நாளல்ல, என் ஆயிசுகாலம் வரையில் யோசனை செய்து பார்த்தாலும், உங்களுடைய நினைவும் வடிவமும் என் மனசைவிட்டு மாறப்போகிறதே இல்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இருந்தாலும், நாம் இங்கே தனியாக இருப்பதைப் பற்றி உங்களுடைய மனம் நிரம்பவும் சங்கடப்படுகிறது. ஆகையால், அப்படி உங்களை வருத்த எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆகையால், நான் எழுந்து வருகிறேன். உங்களுடைய பிரியப்படி நாம் நம்முடைய ஜாகைக்குப்போகலாம். நீங்கள் இன்று பகல் முழுவதும் நன்றாக ஆழ்ந்து யோசனை செய்து, எப்படியாவது என்னுடைய வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். நாளைக்குக் காலையில் நீங்கள் படுக்கையிலிருந்து எழுந்திருந்தவுடனே உங்களுடைய முடிவை எனக்குத் தெரிவியுங்கள். அது எனக்கு அனுகூலமாக இருந்தால், என்னைவிட பாக்கியசாலி யாரும் இருக்கமாட்டாள். அது எனக்கு விரோதமாக இருந்தால், அதன் பிறகு நான் என்னுடைய கஷ்டங்களை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்துக்கொள்ள வழி தேடுகிறேன். உங்களுக்கெதிரில் நான் குளத்தில் விழுந்தால்தானே நீங்கள் என்னைத் தடுப்பீர்கள். யாருக்கும் தெரியாதபடி நான் போய், அதே சத்திரத்திலுள்ள கிணற்றில் விழுந்து என்னுடைய உயிரை விட்டுவிடுகிறேன். என்னால் உங்களுக்கு எவ்விதத் துன்பமும் இல்லாமல் போய்விடும். என்ன இருந்தாலும், நான் உங்களை நினைத்து உயிர் விடுவேன். ஆனால், அந்தப் பாவமும் பழியும் உங்களை ஒருநாளும் விடப்போகிறதில்லை. நான் உயிருக்குயிராக