பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 மதித்துள்ள உங்களை நான் அடையாமல் போகும்படி நீங்கள் செய்தால், நீங்கள் உயிருக்கு உயிராக மதித்திருக்கும் அந்தப் பெண்ணை நீங்கள் அடைவதற்குள் உங்கள் இருவருக்கும் ஏதேனும் கஷ்டங்கள் நேர்ந்தாலும் நேரலாம். ஆகையால், நீங்கள் நன்றாகச் சிந்தித்து எப்படியாவது இந்த அடிமை பிழைத்துப்போகும்படியான மார்க்கம் செய்ய வேண்டும். நான் இறப்பதும், இருப்பதும் உங்களுடைய கையிலேதான் இருக்கிறது' என்றுநிரம்பவும் உருக்கமாகப் பேசிய வண்ணம் நடக்க ஆரம்பித்தாள். அவளது சொற்களுக்கு எவ்வித மறுமொழியும் தரமாட்டாமல் தவித்தவனாய் நமது யெளவன வீரன் அவளைத் தொடர்ந்து மெளனமாகவே நடக்கலானான். அவளும் அதற்குமேல் வாய் திறந்து பேச வெட்கியும், திரும்பி அவனது முகத்தைப் பார்க்க நாணியும் நடந்தாள். தான் எண்ணிவந்த காரியம் பலியாமையால், அளவற்ற ஏமாற்றமும், அவமானமும், துயரமும் எழுந்து அவளது அழகிய முகத்தை முற்றிலும் விகாரப்படுத்தின. ஆகையால், அவள் நடைப் பிணம் போல முற்றிலும் பரிதாபகரமான தோற்றத் தோடு நடந்து முன்னே சென்றாள். கலியாணசுந்தரமோ சற்று நேரத்துக்கு முன் நடந்த மகாவிபரீதமானசம்பவங்களைத் தனது மனதில் பாவித்து அவைகளிலேயே தனது முழு மனத்தையும் லயிக்க விடுத்து மெய்மறந்து உயிரற்ற பாவைபோல நடந்து சென்றான். அரைநாழிகை சாவகாசத்தில் இருவரும் சத்திரத்தண்டை நெருங்கினர். அப்போது கலியாணசுந்தரம் உடனேநின்றவனாய் அவளை நோக்கி, 'தனம்! நீ முன்னால் போ; நான் கொஞ்ச நேரம் பொறுத்து உள்ளே வருகிறேன். கொஞ்ச நேரத்துக்கு முன் சோலையிலும் திருக்குளத்திலும் நடந்த விஷயங்களை எல்லாம் நான் யாரிடத்திலாவது வெளியிட்டுவிடப் போகிறேன் என்ற கவலையே உனக்கு வேண்டாம். ஏற்கெனவே நீ என்னை