பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 51 போலீஸ் அதிகாரியைத் தொடர்ந்து அந்தக் கச்சேரிக்குள் செல்ல, சிறிது நேரத்தில், அவன் அந்த நகரத்தின் போலீஷ் கமிஷனர் இருந்த இடத்தில் கொண்டுபோய் அவருக்கு முன்னாக நிறுத்தப்பட்டான். அந்த மனிதர் சுமார் ஐம்பது வயது அடைந்தவராகக் காணப்பட்டார். ஆனாலும், அவர் நிரம்பவும் முறுக்காகவும் அமர்த்தலாகவும் பயங்கரமாகவும் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் கலியான சுந்தரத்தைப் பார்த்து, " ஐயா! உம்முடைய பெயரென்ன?” என்றார். நமது யெளவனப் புருஷன், "என் பெயர் கலியான சுந்தரம்' என்றான். அதைக்கேட்ட போலீஸ் கமிஷனர், 'ஐயா! எனக்கு உம்முடைய ரகசியமெல்லாம் தெரியும். நீர் என்னிடத்தில் உண்மையை மறைப்பதில் உபயோகமில்லை. உம்முடைய உண்மையான பெயர் வேறே இருக்க, அதை மாற்றி நீர் கலியாணசுந்தரம் என்று பொய்ப் பெயர் வைத்திருப்பதும் எனக்குத் தெரியும். அதை நீர் நிஜமென்று ஒப்புக் கொள்ளப் போகிறீரா? அல்லது இல்லை என்று மறுக்கப் போகிறீரா? வளர்த்தாமல் சுருக்கமாகப் பேசும். ' என்று அழுத்தமாகவும் நிதானமாகவும் பேசினார். அதைக்கேட்ட நமது வீரன், 'ஆம்; உண்மைதான். நான் என்னுடைய நிஜமான பெயரைக் கலியாணசுந்தரம் என்று மாற்றி வைத்துக்கொண்டிருப்பது மெய்தான். ஆனால், நான் அப்படி மாற்றிக்கொண்டிருப்பதற்கு சில முகாந்தரங்கள் இருக்கின்றன. அவைகளை நான், நீங்கள் திருப்தி அடையும் படி எடுத்துச் சொல்லத்தடையில்லை' என்றான். உடனே போலீஸ் கமிஷனர் சடக்கென்று இடைமறுத்துப் பேசத் தொடங்கி, "சரி; அதுவே எங்களுக்குப் போதுமானது. உம்முடைய சமாதானமெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. நீர் அன்னிய தேசத்து மனிதர்; உம்முடைய பெயரை மாற்றி வைத்துக்கொண்டு இந்த தேசத்திற்குள் வந்து ஏதோ கருத்தோடு இருந்து வருகிறீர். இந்த தேசத்து ராஜனுக்குப்