பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 53 செய்து சுதாவாகவே விஷயங்களை அறிந்து கொள்ளுகிறோம். விசாரணை நடக்கும் போது, நீர் உம்முடைய வரலாற்றைச் சொல்லிக் கொள்ளும் ' என்று கூறித் தமக்கெதிரிலிருந்த போலீஸ் சிப்பந்தியை நோக்கி, “அழைத்துக் கொண்டு போ; எனக்கு வேறே அவசர ஜோலி இருக்கிறது' என்றார். உடனே அந்தப் போலீஸ் சிப்பந்தி கலியாணசுந்தரத்தண்டை நெருங்கிவந்து, தனது கையால் அவனது தோளைத் தட்டி, 'வாருங்கள் ஐயா! போவோம். நேரமாகிறது. எஜமானுக்கு வேறே அவசர ஜோலி இருக்கிறதாம்" என்று கூறி வற்புறுத்த, அப்படிப்பட்ட முரடர்களிடத்தில் தான் அதற்குமேல் வாக்கு வாதம் செய்வதில் பயனில்லை என்று உணர்ந்த கலியான சுந்தரம் அவ்விடத்தைவிட்டு வெளியில் நடந்தான். இருள் நிறைந்திருந்த ஒரு தாழ்வாரத்தின் வழியாக அவனை நடத்திச் சென்ற போலீஸ் சிப்பந்தி, சிறிதுதுரத்திற்கு அப்பாலிருந்ததும் கனமான இரும்புக் கம்பிகளால் பாதுகாக்கப்பட்டதுமான ஒரு விடுதியிலிருந்த அறைக்குள் அவனைக் கொண்டு போய் விடுத்தான். அவன் உள்ளே சென்றவுடனே அறையின் வெளிக்கதவு மூடப்பட்டது. வெளிப் பக்கத்தில் பெருத்த தாழ்ப்பாள் மாட்டப்பட்டதனால் உண்டான ஓசையும், பூட்டில் திறவுகோல் சுழற்றப்பட்ட ஒசையும் உண்டாகி நமது யெளவனப் புருஷனது செவியில்படவே, அவனது மனதும் உடம்பும் கலகலத்து ஆடி உட்கார்ந்துபோய்விட்டன. இந்த உலகத்திலுள்ள சகலமான வஸ்துக்களும் அவனது திருஷ்டியில் படாமல் ஒரு நொடியில் விலகிப் போய்விட்டன. ஆனாலும், திருவாரூருக்கு அருகில் இருந்த இன்பவல் லியான அவனது அருமைக் காதலியினது மனோகர வடிவம் மாத்திரம் அவனது மனதைவிட்டு அகலாமல் அவனுடன் கூடவே வந்தது.