பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55 உறுதியாகவும் பந்தோபஸ் தாகவும் இருந்த அந்த விடுதி அந்தக் கச்சேரியின் முதலாவது மாடத்தில் இருந்ததன்றி, அதற்கு முன்பக்கத்தில் இருளடர்ந்து சந்துபோல நீண்டிருந்த தாழ்வாரம் ஒன்று இருந்தது. ஆகையால், அப்போதைக்கு அப்போது, கலியாணசுந்தரம் அந்த அறையைவிட்டு வெளியில் வந்து தாழ் வாரத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு உள்ளே போகவும் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவன்சத்திரத்திலிருந்து போலீஸ் அதிகாரியினால் அழைத்து வரப்பட்டபோது அதன் காரணம் என்னவாக இருக்கலாம் என்று பலவாறு யோசனைகள் செய்து வந்தான் என்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அதன்பிறகு கமிஷனர் தன்னை வெகு சுலபத்தில் சிறைச்சாலைக்கு அனுப்பியதைக் காண, இன்னாருடைய தூண்டுதலினாலேதான் காரியம் அவ்வாறு நடந்திருக்க வேண்டும் என்ற ஒரு நிச்சயம் அவனது மனதில் ஏற்பட்டுப் போனது. இருந்தாலும், தான் தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்ட காரணம் பற்றி, நல்ல சந்தர்ப்பத்தில் தனக்கு அப்படிப்பட்ட இடையூறு சம்பவித்து விட்டதே என்ற நினைவினால், அவன் தன்னைத்தானேதுஷித்துக் கொண்டான். அவன் அவ்வாறு சிறைப்படுத்தப்பட்ட தினம் முதல் அவ்விடத்தில் நேர்ந்த சம்பவங்களைக் கவனிப்போம். அவன் அவ்விடத்தில் அடைக்கப்பட்டபோது பகல் சுமார் பதினோரு மணி சமயம் இருக்கலாம். அன்றைய தினம் பகல் சுமார் ஒரு மணி நேரமானபோது ஒரு போலீஸ் ஜவான்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து, ஒரு தட்டில் நல்ல காய்கறி பதார்த்தங்களோடு கூடிய மாதுரியமான போஜனத்தைக் கொணர்ந்து அவனுக்கு முன்னால் வைத்து, ஒரு குடத்தில் புதிய தண்ணிர் கொணர்ந்து உள்ளே இருந்த மண்பானையில் ஊற்றினான். அப்போது கலியாணசுந்தரத்தின் மனமானது விவரிக்க இயலாதபடிசஞ்சலமடைந்து குழம்பிப் போயிருந்தது.