பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 மானாலும் படிக்கலாம், அல்லது எழுதலாம். ஆனால் நீங்கள் வெளியில் யாருக்காவது கடிதம் எழுதவேண்டுமானால், அது கமிஷனர் மூலமாகவே போகவேண்டும்' என்று கூறிவிட்டு வாசற் கதவை மறுபடியும் மூடிப்பூட்டிக்கொண்டு வெளியில் போய்விட்டான். தனியாக விடப்பட்ட கலியாணசுந்தரம் தனக்கு அருகில் வைக்கப்பட்ட புஸ்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். அவற்றில் புராணங்கள், கதைகள், நாடகங்கள், கவிகள், சாஸ்திரங்கள், தேச சரித்திரங்கள் முதலிய சகலவித நூல்களிலும் வகைக்குப் பல புஸ்தகங்கள் இருந்தன. தான் ஒரு வருஷ காலம் அவ்விடத்தில் அடைபட்டிருந்தால் கூட, தான் சுலபமாகப் பொழுதுபோக்க அனுகூலமாக அவ்விடத்தில் நல்ல நல்ல புஸ்தகங்கள் இருந்ததைக் காண அவனுக்கு ஒருவித சந்தேகம் உண்டாயிற்று. தான் நெடுங்காலம், அவ்விடத்தில் இருக்க வேண்டுமென்று கமிஷனர் ஒருவேளை கட்டளை இட்டிருப்பதால் அதற்காக அவன் அத்தனை புஸ்தகங்களை யும் கொணர்ந்து வைத்திருப்பானோ என்ற ஒரு கவலை உண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் அந்தக் கவலை நீங்கியது. தான் அங்கே இருக்கப் போவது எவ்வளவு காலம் என்பதை அறிந்து கொள்ளாமல், அந்த ஜவான் தனது கையில் அகப்பட்ட புஸ்தகங்களைத்தான் கொண்டுவந்திருக்க வேண்டுமென்ற நினைவே முடிவாக நின்றது. ஆகையால், அவன் ஏதோ ஒரு புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதைப் படிப்பதில் தனது கவனத்தைச் செலுத்த முயன்று கொண்டிருந்தான். இருந்தாலும் அவனது மனம் கட்டிலடங்காமல் பல விஷயங்களில் சென்று சிதறிய வண்ணம் இருந்தது. அவன் தனது அப்போதைய நிலைமையைப் பற்றியும், ஷண்முகவடிவைப் பற்றியும், அம்மாளு, தனம் முதலியவர்களைப் பற்றியும் மாறி மாறி எண்ணமிடுவதிலேயே