உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பூர்ணசந்திரோதயம்-3 அன்றைய பொழுதையெல்லாம் செலவிட்டான். இரவு நேரம் வந்தது. பகலில் வந்த ஜவான் மறுபடியும் வந்து, உட்புறத்திலிருந்த ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்துவிட்டு பகற்பொழுதில் கொண்டுவந்தது போலவே, அப்போதும் நல்ல மாதுரியமான போஜனம் கொணர்ந்து வைத்துவிட்டுக் கதவை மூடிப் பூட்டிக் கொண்டு வெளியில் போய்விட்டான். அதுபோலவே, மறுநாட்காலையிலும் அந்த ஜவான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான். ஆனால், அப்போது அவனோடு கூட ஒரு வேலைக்காரக் கிழவியும் வந்து சேர்ந்தாள். அவள் அந்த அறையை நன்றாகப் பெருக்கிச் சுத்தி செய்துவிட்டு அவனுடைய ஸ்நானத்துக்குத் தேவையான தண்ணிர் கொணர்ந்து நிரப்பிவிட்டுச் சென்றாள். அவள் அவ்விடத்தில் வேலை செய்த சொற்பகாலத்தில் கலியான சுந்தரம் அறையைவிட்டு வெளியில் வந்து தாழ் வாரத்தில் உலாவ விடப்பட்டிருந்தான். வேலைக்காரி வெளியில் போனவுடனேஜவான் அவனை உள்ளே அனுப்பிவிட்டு காலை நேரத்துக்குத் தேவையான பலவகைப்பட்ட சிறந்த பலகாரங்களையும் தண்ணீரையும் கொணர்ந்து வைத்தபிறகு கதவைப் பூட்டிக் கொண்டு போய்விட்டான். இவ்வாறு ஒவ்வொரு நாளும் மூன்று வேளைகள் அவனுக்கு வேண்டிய ஆகாரங்கள் வந்து சேர்ந்தன. எவ்வித மாறுபாடும் இன்றி ஒவ்வொருநாளும் முதல் நாளைப் போலவே கழிந்து கொண்டு வந்தது. ஆகையால், ஒவ்வொரு நாள் கழிவதும் கலியான சுந்தரத்துக்கு நிரம் பவும் துன்பகரமாக இருந்தது. அவன் அவ்விடத்தில் அடைபட்டிருந்த காலத்தில், சாதாரணக் குற்றவாளி போல நிரம்பவும் கொடுமையாக நடத்தப்படாமல் முற்றிலும் மரியாதையாக நடத்தப்பட்டு வந்தான். ஆனாலும், அவன் தனது நிலைமையப் பற்றி சந்தோஷம் அடைந்திருந்தான் என்று நாம் நினைக்க முடியுமா? இல்லை இல்லை. எதிர்பார்க்காதபடி வந்து நேர்ந்த அந்தப் பெருத்த அவகேட்டை, அவன் தனது இயற்கையான மனோ