பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பூர்ணசந்திரோதயம்-3 அவள் அதற்கு முந்திய கடிதமொன்றில் எழுதித் தெரிவித்திருந்தாள். ஆகையால், அவள் கடிதம் எழுதாமல் சும்மா இருக்க நியாயமில்லை என்றும், அவர்கள் விஷயத்தை மறைக்கிறார்கள் என்றும் அவன் எண்ணிக் கொண்டதன்றி, அவர்கள் தான் சத்திரத்தில் வைத்திருந்த தஸ்தாவேஜுகளை அபகரித்துக் கொள்ளத் துணிந்ததுபோல தனக்கு வந்துள்ள கடிதங்களையும் வாங்கிப் படித்துவிட்டு பத்திரப்படுத்தி இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான். இவ்வாறு அவனது மனம் இரவு பகல் எப்போதும் ஒய்வின்றித் தாமரை இலைத் தண்ணீர்போலத் தத்தளித்துப் புண்பட்டு ஆறாத் துயரத்தில் ஆழ்ந்து உருகிக் கரைந்து கொண்டிருக்க, முன் சொன்னபடி ஒருமாத காலம் கழிந்தது. சகிக்க இயலாத மன வியாதியினாலும், நிரம்பவும் நெருக்கமான அந்த அறையில் அடைபட்டிருந்ததாலும், அவனது உடம்பு அசெளக்கியம் அடையத் தொடங்கியது. ஆகவே, அவன் ஒருநாள் இரவில் வழக்கத்திற்கு முன்னாகவே விளக்கை அணைத்துவிட்டு தனது படுக்கையில் படுத்துக்கொண்டான். பற்பல விஷயங்களில் சிதறியிருந்த அவனது உணர்வு படிப்படியாக மயங்கிக் கலங்கி அவனைக் கடுமையான நித்திரையில் ஆழ்த்தி இன்பகரமான ஒரு கனவை உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஒர் இராஜ மாளிகையில் மகா உன்னதமாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு சயனமாளிகையில் ஒரு சப்பிரமஞ்சத்தின் மீது தான் சயனித்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. மகா சிறப்பாகத் தோன்றிய அந்தச் சயனமாளிகையில், ஆயிரத்தெட்டு மாற்றுத் தங்கத்திற்கு மெருகு கொடுத்தது போன்ற அற்புத ஜோதியானது எங்கும் பரவி மூலை முடுக்குகளில் கூட இருள் என்பதே இல்லாதபடி செய்து ஜெகஜ்ஜோதியாக நிரம்பித் தோன்றியது. அது பூலோகத்தில் வானுலகத்தில் தெய்வீகமாக உண்டாகும் ஜோதியாக இருந்தது. அந்தப் பிரகாசம் அவனது உடம் பில் படுவது சிறிதும் துன்பகரமாகத் தோன்றாமல், தேவாமிருதத்தால் அபிஷேகம் செய்வதுபோல, அவனை