பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பூர்ணசந்திரோதயம்-3 அப்புறத்தில் எலி சுரண்டுவது போன்ற புதுமையான ஓர் ஓசை உண்டானதைக் கேட்டு அவன் திடுக் கிட்டு அதை உற்றுக் கவனித்தான். உடனே அந்த ஒசை நின்றுபோயிற்று. அவன் அதை அலட்சியம் செய்து, மறுபடியும் தூங்க எத்தனித்தான். அவனது இமைகள் மறுபடியும் மூடிக்கொண்டன. அவன் அரை நித்திரையாக இருந்த சமயத்தில் முன்னே உண்டான அந்த விபரீத ஓசை மறுபடியும் உண்டாயிற்று. அவன் மறுபடியும் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு தனது மூச்சை அடக்கிய வண்ணம், முன்னிலும் அதிக கவனமாக உற்றுக் கேட்கலானான். அந்த ஓசை எலி அறுப்பதனால் உண்டாகும் ஒசையல்ல என்பதும் நிச்சயமாகத் தெரிந்தது. யாரோ மனிதர்கன்னக்கோல் கொண்டு அந்தச் சுவரில் துளை செய்வது போலத் தோன்றியது. பக்கத்து அறையில் அடைபட்டிருக்கும் யாரோ ஒரு கைதி தப்பி ஓடிப்போகும் எண்ணத்துடன் சுவரில் துளை செய்கிறான் என்ற எண்ணம் உண்டாகவே, கலியாணசுந்தரம் ஒருவாறு மகிழ்ச்சி அடைந்தான். ஏனென்றால், அந்த அக்கிரமச் சிறையிலிருந்து தானும் தப்பித்து அதேவழியாகப் போய்விடலாம் என்ற நினைவினால் அவன் அவ்வாறு மகிழ்ச்சி அடைந்தான். அந்த ஒசை தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. அவ்வாறு தோண்டிய மனிதன், சுவரின் முக்கால் பாகத்துக்கு மேல் பெயர்த்தெடுத்திருந்ததால், தான் பேசுவது ஒருவேளை அவனுடைய காதில் விழுமெனத் தோன்றியது. ஆகையால், தான் அவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம் என்ற எண்ணமும் உண்டானது. ஆனாலும், அவன் பொறுமை யோடு தன்னை அடக்கிக்கொண்டு அந்த ஓசையைக் கவனித்த படியே இருந்தான். சுமார் இரண்டு மணி சாவகாசம் வரையில் அந்த ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆகையால், பக்கத்து அறையில் அடைபட்டிருந்த யாரோ ஒரு கைதியே அவ்வாறு முயற்சி செய்கிறானென்பது நிச்சயம் ஆயிற்று. அதுவுமன்றி, அந்தக் கைதி சுவரைப்