பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63 பெயர்த்ததில் கல்களும், சுண்ணாம்பும் விழுந்த ஒசையும், அவன் அவைகளை உடனுக்குடன் எடுத்து வேறே இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்ததும் அவனுக்குப் புலனாயின. ஒருவேளை அந்த வேலை இரவு கழிவதற்குள் பூர்த்தியடையாவிட்டால், மறுநாள் சாப்பாடு கொண்டுவரும் ஜவான் அந்தத் துளையைக் கவனிக்காமல் இருக்கும் பொருட்டே அவன் அவ்வாறு எச்சரிப்பாக நடந்து கொள்ளுகிறான் என்று கலியாணசுந்தரம் யூகித்துக் கொண்டான். அதன்பிறகு சிறிது நேரத்தில் அந்த ஒசை நின்று போய்விட்டது. அது மறுபடியும் தொடங்கும் என்ற எண்ணத் தோடு கலியாணசுந்தரம் நெடுநேரம் வரையில் விழிப்பாகவே இருந்து கவனித்துப் பார்த்தான். ஆனால், அந்த ஒசை மறுபடி உண்டாகவே இல்லை. அவ்வளவோடு தானும் தூங்கலாம் என்று நினைத்த நமது யெளவனப் புருஷன் கண்களை மூடிக்கொண்டு அயர முயற்சித்தான். ஆனால், அவனுக்குத் தூக்கம் பிடிக்காமலேயே இருந்தது. ஏனென்றால், அவன் அந்தச் சிறைச்சாலையில் ஒரேமாதிரியாக ஒரு மாத காலம் இருந்து, அந்த அபூர்வச்சம்பவத்தை அன்றைய தினந்தான் உணர்ந்தான். ஆகையால், அதனால் ஏற்பட்ட அபாரமான மனவெழுச்சியும் உற்சாகமும் அடங்காமலேயே இருந்தன. இருந்தாலும், விடியற்காலத்தில் அவன் மறுபடியும் துயிலில் ஆழ்ந்து பொழுது விடிந்தபிறகு வழக்கம் போல விழித்துக் கொண்டு எழுந்தான். சுவரை யாரோ பெயர்த்ததாக உண்டான எண்ணமானது அதற்கு முன்னால் உண்டான சொப்பனத்தின் தொடர்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது. ஆகையால், அது பொய்யோ மெய்யோ என்பதை நிச்சயிக்க மாட்டாமல் கலியாணசுந்தரம் கலவரம் அடைந்தவனாய் எழுந்து தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டான். go.g.III-5