பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பூர்ணசந்திரோதயம்-3 புறப்பட்டுப்போய் விட ஆயத்தமாக இருக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நிரம்பவும் நற்குணமுள்ளவர் என்றும், எவ்விதக் குற்றமும் செய்யாமல் அக்கிரமமாக அடைபட்டிருக்கிறீர்களென்றும் நான் கேள்வியுறுவதால், இந்தப் பயங்கரமான இடத்திலிருந்து தப்பிப்போக நீங்களும் இணங்குவீர்கள் என்ற நம்பிக்கையினால், நான் இதை எழுதியனுப்பி இருக்கிறேன். அப்படித் தந்திரம் செய்து வெளியில் போக, நீங்கள் இஷ்டப்படாவிட்டால், நான் வெளியிட்ட இந்த ரகசியத்தை ஜவானிடம் சொல்லாமலும், என்னைக் காட்டிக் கொடுக்காமலும் இருக்க நான் உங்களை நிரம்பவும் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். ப்படிக்கு, உதவி மறவாத, இப்படிக்கு, உதவி மறவாத இந்திராபாயி. - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்தவுடனே நமது யெளவனப் புருஷன் அடைந்த வியப்பும் பிரமிப்பும் அளவிலடங்காதனவாக இருந்தன. யெளவனப் பருவத்தி னளான ஒரு பெண் அப்படிப்பட்ட மகா துணிகரமான காரியத்தைச் செய்து முடிக்க முயலுவதை உணர, அவனுக்கு அது கனவோ நினைவோவென்ற சந்தேகம் உண்டாயிற்று. கடிதத்தின் எழுத்திலிருந்து, அவள் நன்றாகப் படித்த புத்திசாலி என்பது ஒருவாறு விளங்கியது. அதுவுமன்றி, அந்தச் சிறைச் சாலையின் வேலைக்காரக் கிழவியினது உதவியைக் கொண்டே, அந்தப் பெண் அவ்வாறு தப்பிப்போக முயற்சி செய்கிறாள் என்றும் அவன் யூகித்துக் கொண்டான். ஆனால்,ஒரு சந்தேகம் மாத்திரம் தீராமல் இருந்தது. அந்தப் பெண் அவளிருந்த அறையிலிருந்து தனது அறைக்குள் வந்து அதன்பிறகு எந்த வழியாக வெளிப்பட்டுபோக உத்தேசித்து இருக்கிறாள் என்பது மாத்திரம் அவனுக்கு விளங்காமலிருந்தது. இருந்தாலும் அன்றைய தினம் இரவில் அந்தப் பெண் சுவரைக் கடைசிவரையில் துளைசெய்தவுடனே எப்படியும்