பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பூர்ணசந்திரோதயம்-3 படுத்துக்கொண்டபடி சுவரில் தனது காதை வைத்து ஒசையை நன்றாகக் கவனிக்கத் தொடங்கினான். மகா உழைப்பாளியும் தைரியசாலியுமான அந்தப் பெண் முதல் நாளைய இரவில் செய்ததுபோல அபாரமான ஊக்கத்தோடு சுவரைக் குடைந்து பெயர்த்து வைத்துக்கொண்டிருந்தது நன்றாகத் தெரிந்தது. அவ்வாறு அந்தப் பெண் விடாமுயற்சியோடு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டே வர, கடைசியில் ஒரு கல் பெயர்ந்து கலியாணசுந்தரத்தின் காலில் வந்து விழுந்தது. அவன் உடனே எழுந்து உட்கார்ந்து கொண்டான். கடப்பாரை அவன் இருந்த அறைக்குள்நுழைந்ததைக் கண்ட அந்தப் பெண், 'துளை நெடுக வந்துவிட்டதா? அதுதான் உங்களுடைய அறையா?' என்று குயிலொலி போன்ற தனது குரலால் வினவ, உடனே கலியாணசுந்தரம் ஆமென்று மறுமொழி கூறினான். உடனே அந்தப் பெண், "சரி; இங்கே இருந்து அவ்வளவு துரம் குத்துவது கடினமாக இருக்கிறது. இந்தக் கடப்பாரையை நீங்கள் வாங்கி உங்கள் பக்கத்துச் சுவரில் நன்றாகத் துளை செய்யுங்கள். நீங்கள் அதிகமாகத் தோண்ட வேண்டாம். கொஞ்சம் பெயர்த்தால், அதுவே போதுமானது' என்றாள். அதைக் கேட்ட கலியாணசுந்தரம், அவ்விடத்திலிருந்து தப்பிப்போகும் விஷயத்தில் தான் அவளுக்குத் தன்னால் இயன்ற உதவியை எல்லாம் செய்வதாக உறுதி கூறியதன்றி அவளால் நீட்டப்பட்ட கடப்பாரையை வாங்கி, விசிப் பலகையை ஒரு பக்கமாக நகர்த்தி வைத்துவிட்டு, துளை உண்டாயிருந்த இடத்தில் கடப்பாரையால் மெதுவாக இடித்து ஒரு கல் கனம் பெயர்க்க, உடனே வழி சரியாகப் போய் விட்டது. சுவரில் இரண்டடி சதுரத்திற்கு ஒரு துளை செய்யப்பட்டுப் போயிருந்தது. அப்புறத்திலிருந்து மடந்தை உடனே அவனைநோக்கி, 'இதோ இந்தச் சாமான்களையெல்லாம் வாங்கி அப்புறம் வையுங்கள்' என்று நிரம்பவும் பரபரப்பாகக் கூறியவண்ணம்