பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 69 சில பொருட்களை எடுத்து துவாரத்தின்மீது வைத்தாள். கலியாணசுந்தரம் உடனே தனது கையை நீட்டி சாமான்களை எடுத்தான். பட்டுக் கயிற்றினால் ஆக்கப்பட்டிருந்த ஒரு நூலேனியும், இரும்புக் கம்பிகளை அறுக்கக்கூடிய மூன்று அரங்களும், ஒரு கொத்து நிறைந்த சாவிகளும் அவ்விடத்தில் வைக்கப்பட, கலியாணசுந்தரம் முன்பின் யோசியாமல் விரைவாக அவைகளையெல்லாம் எடுத்துத் தனது அறைக்குள் வைத்தான். உடனே அந்தப் பெண் அவனை நோக்கி நிரம்பவும் இனிமையான குரலில் பேசத்தொடங்கி, சரி; நான் இந்தத் துளையின் வழியாக என் கைகளை நீட்டுகிறேன். நீங்கள் என்னைப் பிடித்து மெதுவாக உங்கள் பக்கத்தில் இழுங்கள்' என்ற நயமாகக் கூறினாள். அதே சமயத்தில் அவளது கைகளிரண்டும் அந்தத் துளைகளில் நீண்டு வந்தன. அந்தக் கைககள் உருட்சி திரட்சியாகவும் தந்தத்தில் கடைந்தெடுக்கப் பட்டவை போலவும் அழகும் யெளவனமும் மினுமினுப்பும் ஜ்வலிப்பனவாய் இருந்தன. அவ்வளவு மேன்மையும் நுட்பமும் பொருந்திய கைகளும் உடம்பும் அந்தத்துளைக்குள் இழுபட்டு வந்தால், கூரான கற்கள் குத்திக் காயம் உண்டாக்கி விடுமோ என்ற அச்சம் நமது யெளவனப் புருஷனது மனத்தில் தோன்றியது. அவன் அந்தப் பெண் பாவையினது அழகிய கரங்களைப் பிடித்து மெதுவாக அவனது பக்கத்தில் வாங்க, உடனே அவளது சிரமும் உடம்பும் துளைக்குள் நுழைந்து அவனது அறைக்குள் வந்தன. அழகே வடிவாக இருந்த அவளது மேனி அப்படி நெருங்கி ஒடுங்கி இப்பால் வருவதைக் கண்ட கலியாண சுந்தரத்தினது மனம் பதறியது. இரக்கமும் பச்சாதாபமும் தோன்றி அவனது மனதை இளக்கின. அவன் நிரம் பவும் பாடுபட்டு அதிக ஜாக் கிரதையாக அவளது உடம்பைப் பிடித்து மெதுவாகத் தனது பக்கத்தில் வாங்கி, அவளுக்கு எவ்விதக் காயமும் இல்லாமல், அவளைத் தனது அறைக்குள் கொண்டுவந்து சேர்த்தான். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அந்த அழகிய மடந்தை உடனே எழுந்து