பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 73 உடனே இந்திராபாயி, நான் இங்கே வந்தபிறகு சில தினங்களுக்குள் இந்த வேலைக்காரியை என் வசப்படுத்திக் கொண்டு அவள் மூலமாக இந்தக் கட்டிடத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது என்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டதன்றி, எனக்கு வேண்டிய இந்தச் சாமான்களையும் வரவழைத்துக் கொண்டேன். என்னுடைய அறையில் பின் பக்கத்திலேயே ஜன்னல்கள் இருக்கின்றன. அதன் வழியாக இறங்கினால், வெளிப்பக்கத்தில் கீழே இருக்கும் முதலைகள் நிறைந்த அகழியில் போய் நான் இறங்க நேரும். அதற்காக நான் உங்களுடைய அறைக்கு வந்தேன். இந்த அறையில் ஜன்னல்கள் முன்பக்கத்தில் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். ஒரு ஜன்னலின் கம்பிகளை அறுத்துக்கொண்டு நாம் வெளியிலுள்ள தாழ்வாரத்துக்குப் போனால், அதன் வழியாக நடந்து இந்தக் கட்டிடத்தின் கடைசிக்குப் போகவேண்டும். அவ்விடத்தில் ஒரு கதவு மூடிப் பூட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திறவுகோல்களில் எதையாவது உபயோகித்து அந்தப் பூட்டைத் திறந்து கொண்டு அவ்விடத்தில் நூலேணியைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கினால், நாம் இந்தக் கட்டிடத்தின் பின்பக்கத்துக்குப் போய்ச் சேரலாம். அவ்விடத்தில் பாராக்காரர் யாரும் இல்லை. அங்கே இருந்து நாம் பக்கத்துத் தெருவுக்குள் நுழைந்து விடலாம்' என்றாள். அதைக்கேட்ட கலியாணசுந்தரம், "சரி; நீ சொல்வது நல்ல யோசனைதான். இப்போது சுமார் பன்னிரண்டரை மணி சமயமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இந்த அரங்களை வைத்துக்கொண்டு ஜன்னல் கம்பிகளை அறுக்க எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியவில்லை. கம்பி எவ்வளவு கனமிருக்கிறது என்று பார்க்கலாம்' என்று கூறியவண்னம், தனது அறையிலிருந்த விளக்கை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு ஒரு ஜன்னலண்டை போய் அதன் கதவைத் திறந்து விட்டு கம்பியின் பருமனை ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டுத்