பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了8 பூர்ணசந்திரோதயம்-3 உடனே இந்திராபாயி, "இதற்குள் நாம் மனத்தளர்வு அடையக் கூடாது. இன்றைக்குக் காரியம் முடியா விட்டால் நாளைய தினம் பார்த்துக்கொள்வோம்; நாம் இருளில் மெதுவாகக் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஒசைப்படாமல் கம்பியை அறுக்கலாம். ஆனால், அந்தப் பாராக்காரன் ஒரு வேளை விழித்துக் கொண்டிருந்து மறுபடியும் வந்தாலும் வருவான். ஆகையால், நாம் நாளையதினம் அந்த வேலையைச் செய்து முடிப்போம்” என்று கூறியவண்ணம், மெதுவாகத் தரையில் உட்கார்ந்து கொண்டாள். அதைக் கண்ட கலியாண சுந்தரம் நிரம்பவும் மகிழ்ச்சியடைந்து, 'நீ பெண்ணாகப் பிறந்திருந்தாலும், நீ நிரம்பவும் தைரியசாலியாக இருக்கிறதைப் பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதிருக்கட்டும்; நீ ஏன் தரையில் உட்கார்ந்து கொள்ளுகிறாய்? அதோ விசிப்பலகை இருக்கிறதே! அதன்மேல் உட்கார்ந்து கொள்' என்றான். உடனே அந்தப் பெண் நிரம்பவும் தணிவான குரலில் பேசத் தொடங்கி, 'நாம் இன்றையதினம் தப்பி வெளியில் போய் விடலாம் என்ற எண்ணமும் மனோதிடமும் ஒன்றுகூடி இது வரையில் எனக்குப் பலம் கொடுத்துக் கொண்டிருந்தன. இன்றைய தினம் காரியம் பலிக்கவில்லை என்பதைக் கண்டவுடனே, இப்போதுதான் களைப் புத் தோன்றுகிறது. பொறுக்கமுடியாத தாகமும், மயக்கமும் உண்டாகின்றன. அதனாலேதான் நான் கீழே உட்கார்ந்து கொண்டேன்; கொஞ்ச நேரம் இப்படியே படுத்துக்கொண்டால், சரியாகிவிடும் ' என்றாள். அதைக்கேட்ட கலியாணசுந்தரம், 'நீ தரையில் படுத்துக் கொள்ள வேண்டாம், இந்தவிசிப்பலகையில் படுத்துக் கொள். தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; சாப்பிடு' என்றான். இந்திராபாயி, "முதலில் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் உங்களுக்கு நிரம் பவும் புண்ணியமுண்டு' என்று பரிதாபகரமாகக் கூறினாள்.