பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77 உடனே கலியாணசுந்தரம் அவ்விடத்தை விட்டு இருளில் தடவிக்கொண்டே தண்ணிர்ப்பானை இருந்த இடத்திற்குப் போய் ஒரு குவளையில் தண்ணீர் மொண்டு எடுத்துக்கொண்டு அவளிடம் போய், "இதோ ஜலமிருக்கிறது; சாப்பிடு” என்றான். அதற்கு அந்தப்பெண் மறுமொழி சொல்லவில்லை. அவன் அவளை மறுபடியும் இரண்டு மூன்று தரம் கூப்பிட்டுப் பார்க்க, அப்போதும் அவள் பேசவில்லை. அவள் மயங்கி விழுந்து விட்டாள் என்று நினைத்துக்கொண்ட அந்த யெளவனப் புருஷன் மெதுவாக அவளது உடம்பைத் தனது கையால் தட்டி அவளை எழுப்ப, அப்போதும் அவள் பேசவில்லை. அவன் உடனே அவளது தலையை எடுத்து உயர்த்தி ஒரு கையால் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு இன்னொரு கையிலிருந்த தண்ணிரை வாயில் வார்க்க, அவள் இரண்டு மூன்று வாய் தண்ணிர் குடித்த பிறகு, 'அப்பாடா!' என்று சொல்லிக் கொண்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "நான் இப்போது எங்கே இருக்கிறேன்? நீங்கள் யார்?' என்று கேட்ட வண்ணம் துவண்டு துவண்டு கீழே விழ, உடனே நமது கலியாணசுந்தரம் அவள் பிரக்ஞை தப்பிப் படுத்திருக்கிறாள் என்று நினைத்து, அவளை மெதுவாகத் துக்கி எடுக்க அவள், ஆகா இந்த முகமூடி மூச்சுவிட முடியாமல் மூக்கை அடைக்கிறது. இதை எடுத்து விடுகிறேன்' என்று கூறியவண்ணம் தனது வலக்கரத்தால் அந்த முகமூடியை எடுத்துக் கீழே போட்டு விட்டாள். அடுத்த நிமிஷத்தில் அவன் அவளைத் துக்க, அவள் அவனது மார்பில் சாய்ந்து ஆவலோடு அவனை இறுகக் கட்டிக்கொண்டு அப்படியே மயங்கித் துவள்பவள் போலப் பாசாங்கு செய்தாள். யெளவனச் சிறுவன் சகிக்க இயலாத லஜ்ஜையடைந்து அவளை விசையாக விசிப்பலகை யண்டை எடுத்துப்போக, அதற்குள் அவளது அழகிய முகம் அவனது - முகத்தோடு பல தடவைகளில் உராய்ந்தது. அவளது மார்பு அவனது மார்பில் போய் அழுந்தியது. அந்தச் சங்கடங்களைச் சிறிதும் சகிக்காத கலியாணசுந்தரம் அருவருப்படைந்து