உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 81 போனார். அதுவரையில் மகா உத்தமிபோல நடந்து வந்த நற்குணவதியான லீலாவதி அப்படிப்பட்ட இழிந்த காரியத்தில் தலையிடுவாளா என்ற சந்தேகம் தோன்றி அவரது மனதை உலப்பியது. ஆகையால், அங்கே வந்தவள் உண்மையில் லீலாவதிதானோ, அல்லது, அவளைப் போன்ற தோற்றமுடைய வேறு பெண்ணோ என்ற ஐயமும் தோன்றியது. மருங்காபுரி ஜெமீந்தார் தமது இளம் பிராயத்திலிருந்து, அப்படிப்பட்ட துன்மார்க்கச் செய்கைகளைச் செய்து செய்து பழகிய மனிதராக இருந்தாலும், அந்தச் சமயத்தில் அவரது மனம் பட்ட பாடும் அவர் அடைந்த அவமானமும் அளவற்றன என்றே கூற வேண்டும். உலகில் மனிதர் பிறரது மனைவியரைக் கண்டு அவரது கற்பை அற்பமாக மதித்து, அவர் மீது எளிதில் துர்மோகங்கொண்டு அதனால் பெரிதும் இன்புறுவது உண்டு. ஆனால் தமது மனைவியரைக் கண்டு அன்னிய புருஷன் அவ்வாறு மோகம் கொள்கிறான் என்பதை அவர்கள் அறிவார்களாயின் அவர்களுக்கு உண்டாகும் கோபத்திற்கும், பதைப்பிற்கும் அளவு சொல்ல இயலாது. பெரும்பாலோரான மனிதருக்குத் தமது மானம் என்றால் மாத்திரம், அது மனதில் சுருக்கென்று தைக்கிறதே அன்றிப் பிறரது மானம் என்றால் சிறிதும் உறைக்கிறதில்லை. அதுபோல, நமது மருங்காபுரிக் கிழவர் தமது தம்பியினது புத்திரியான லீலாவதி விலை மகளினது தொழிலில் இறங்கியிருக்கிறாள் என்பதை உணர, அந்த அவமானமும் சங்கடமும் அவரது மனதில் பசுமரத்தாணி போலத் தைத்து ஊடுருவிச் சென்றன. ஆகையால், அவர் லீலாவதியினது முகத்தில் விழிக்கவும் வெட்கிக் கட்டிலை விட்டுக் கீழே இறங்கி, ஒர் ஆசனத்தில் உட்கார்ந்து தமது கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார். எப்போதும் மனிதர் நன்றாக ஆய்ந்தோய்ந்து பாராமல் அப்படி மூடுமந்திரமாக ஸ்திரீகளை வரவழைத்தால், அதனால் அப்படிப்பட்ட பலவகைப்பட்ட எதிர்பாராத எண்ணிறந்த துன்பங்களும்