பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பூர்ணசந்திரோதயம்-3 துயரங்களும் வந்து நேரும் என்பது அவரது மனதில் நன்றாகப் பட்டது, அதுவுமன்றி, அதற்கு முன் அவரது மனதில் பூடகமாக இருந்த விஷயங்கள் எல்லாம் ஒரு நொடியில் வெட்டவெளிச்சமாயின. அதற்கு முந்திய திங்கட்கிழமை இரவில் தாமும் இளவரசரும் அம்மன் பேட்டையிலிருந்து வந்த காலத்தில், தங்களைப் பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு போவதற்குக் காரணமாக இருந்தவளும், பார்சீஜாதி ஸ்திரீயைப் போல வேஷம் போட்டு வந்து இளவரசரிடம் ஜெகஜால வித்தைகள் காட்டி அவரது மதியை மயக்கி வஞ்சித்தவளும் தமது தம்பியின் மகளான லீலாவதிதான் என்ற உண்மை உடனே விளங்கிவிட்டது. அதுவுமன்றி புதன்கிழமை அன்று தாம் தமது மாளிகையில் வெல் வெட்டு மாடத்திலிருந்து திருடனிடத்திலிருந்து தினசரி டைரியை எதிர்பார்த்திருந்தபோது, எவருக்கும் தெரியாமல் அந்த டைரியைக் கொணர்ந்து பூத்தொட்டிக்குள் வைத்தவளும் தமது லீலாவதியே என்பதும் சந்தேகமறத் தெரிந்தது. கடைசியில், அவள் இன்னான் என்பது தெரியாத ஒர் அன்னியனிடம், இரண்டாயிரம் ரூபாயைக் கருதித் தனது கற்பை இழக்கத் துணிந்து வந்தாள் என்ற விஷயமும், அதுபோலவே, அவள் அதற்கு முன் எத்தனை மனிதரிடத்தில் நடந்து கொண்டிருப்பாளோ என்ற எண்ணமும் எழுந்து, அவரது மனம் முறிந்துபோகும்படி செய்துவிடவே, அவர் முற்றிலும் கலங்கிக் கலகலத்துத் தலையை நிமிர்த்தமாட்டாமல் அப்படியே உட்கார்ந்து போனார். மகா ரூபவதியும், நற்குணவதியுமான தமது தம்பியினது புதல்வி ஒருத்தியின் இடத்தில் மாத்திரம் அவர் உண்மையான பிரேமையும் அந்தரங்கமான வாஞ்சையும் வைத்திருந்தார். ஆதலால், தாம் கொஞ்சமும் சந்தேகியாதபடி அவள் அவ்வளவு தூரம் கெட்ட நடவடிக்கைகளில் இறங்கி இருந்தது, அவரால் தாங்க முடியாத மகா பெரிய இடியாக இருக்கவே, அவர் நிரம்பவும் தத்தளித்துப் பரம சங்கடமான நிலைமையை அடைந்தார். அதுபோலவே லீலாவதியின்