பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 . - பூர்ணசந்திரோதயம்-3 பாயி சந்தேகப்படுவாள். ஆகையால், நீ உன்னுடைய விசனத்தைக்காட்டாமல், சாதாரணமாக இரு' என்று அன்பாகக் கூறியபின் அந்த அறையின் கதவண்டை போய் நின்று ஹேமாபாயியைக் கூப்பிட அவள் உடனே வந்து ஆஜரானாள். அவளைக் கண்ட ஜெமீந்தார், 'ஹேமாபாயீ எனக்கு இந்த இடம் சரிப்படவில்லை. இந்தப் பெண்ணை நான் என்னுடைய ஜாகைக்கே அழைத்துக்கொண்டுபோக உத்தேசிக்கிறேன். இவளும் அங்கே வர இணங்கிவிட்டாள். ஒரு வண்டி வேண்டும். தயார்ப்படுத்து. உனக்குச் சேரவேண்டிய சன்மானத்தை நான் நாளையதினம் உன்னிடம் சேர்த்து விடுகிறேன்' என்றார். அதைக் கேட்ட ஹேமாபாயி ஒருவாறு திடுக்கிட்டு அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் அவ்வளவு அதிக அந்தரங்க சிநேகம் செய்து கொண்டதையும், அவ்விடத்தை விட்டுப் போகத் தீர்மானித்துக் கொண்டதையும் பற்றி, அவள் நிரம்பவும் வியப்பு அடைந்தாள். ஆனாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வெளியில் போய்விட்டுக் கால்நாழிகை சாவகாசத்தில் திரும்பி வந்து வண்டி ஆயத்தமாக நிற்கிறது என்று உத்தரம் கூறினாள். உடனே ஜெமீந்தாரும் லீலாவதியும் அவ்விடத்தை விட்டுப்புறப்பட்டுக் கீழே இறங்கி, வாசலில் காத்திருந்த வண்டியில் ஏறி உட்கார்ந்துகொள்ள, வண்டி புறப்பட்டு பத்து நிமிஷ நேரத்தில் ஜெமீந்தாரினது மாளிகையை அடைந்தது. அவர்கள் இருவரும் ஹேமாபாயியை விட்டுப் பிரியும் முன் அவளிடத்தில் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மெளனமாகவே வந்ததன்றி, வண்டியில் இருந்தபோதும் அவர்கள் ஒருவரோ டொருவர் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்தனர். அப்படிப்பட்ட விபரீதமான நிலைமையில் தாங்கள் இருவரும் இருப்பதைப் பற்றி அவர்களிருவரும் சகிக்கவொண்ணாத சஞ்சலம் அடைந்ததன்றி ஒருவரையொருவர் ஏறெடுத்துப் பார்க்கவும் வெட்கி நிரம்பவும் சங்கடத்திற்கு ஆளாயிருந்தனர். தனது