பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 85 முந்திய நடவடிக்கைகளை எல்லாம் அவர் அறிந்து கொண்டிருப்பாரே என்று லீலாவதி நினைத்துக் கலங்கியது போல, ஜெமீந்தாரும் தாம் காமாதுர நடத்தையுள்ளவர் என்பதைத் தமது தம்பி மகள் ஸ் பஷ்டமாக அறிந்து கொண்டிருப்பாள் என்ற நினைவினால் தவிக்க, இருவரும் அந்தச் சமயத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்தது அவர்களுக்குப் பரம வேதனையாக இருந்தது. இருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிய மாட்டாமல் இருவரும் ஜெமீந்தாரினதுமாளிகையை அடைந்து நேராக மேன்மாடத்திற்குச் சென்று வெல்வெட்டு மாடத்தை அடைந்தனர். ஜெமீந்தார் தமது ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் லீலாவதியையும் தமக்கருகில் இருந்த ஒரு லோபாவின் மீது உட்காரச் செய்தார். அவர் தன்னிடத்தில் என்ன விஷயத்தைப் பற்றிப் பேசுவாரோ என்ற கவலையும் திகிலும் கொண்ட லீலாவதி குன்றிக் குறுகி நாணிக்கோணி வேறு திக்கை நோக்கிய வண்ணம் உட்கார்ந்து கொண்டாள். உடனே ஜெமீந்தார் நிரம் பவும் இரக்கமாகவும் வாஞ்சையோடும் பேசத் தொடங்கி, 'அம்மா லீலாவதி! இப்போது நேர்ந்த விஷயத்தைப் பற்றி நான் உன் மேல் ஆயாசப்பட்டு ஏதேனும் கடுமையான வார்த்தைகளை உபயோகிப் பேனோ என்று நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம். உன்னுடைய மகா பரிதாபகரமான வரலாற்றை எல்லாம் நான் ஏற்கெனவே யூகித்துக்கொண்டேன். ஆனாலும், விவரங்களை எல்லாம் உன்னுடைய வாய் மூலமாகக் கேட்டறிந்து கொள்ள நினைக்கிறேன். உன்னுடைய புருஷன் பரமதுஷ்டன் என்பது எனக்கு முன்னமேயே தெரிந்த விஷயம். ஆனாலும், அவன் உன்னை இப்படிப்பட்ட மானக்கேட்டுக்கு இலக்காக்குவான் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. அவன் எதற்கும் பின் வாங்காப் பரமசண்டாளன் என்பது இன்றைய சங்கதியிலிருந்து எனக்கு நன்றாகத் தெரிகிறது. நான்