வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89 செய்த காரியம் எல்லாம் உன் புருஷனுடைய கட்டாயத்தின் மேல் செய்யப்பட்டதா? அல்லது நீயாகவே செய்ததா? என்றார். அதைக் கேட்ட லீலாவதி வெட்கமும் விசனமும் அடைந்தவளாய்க் கீழே குனிந்துகொண்டு, 'ஆம்; அப்பா என் புருஷன் என்னைப் படுத்தி வைக்கும்பாட்டை நான் என்ன வென்று வெளியிடுவேன்; அவர் என்னை மகா கொடுமையாக நடத்தி நிமிஷத்துக்கு நிமிஷம் சித்திரவதை செய்கிறார்; அவர் சொல்வதை எல்லாம் நான் செய்யாவிட்டால், என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்துகிறார். அவருக்கு உண்டாகும் கோபவெறியில் அவர் எப்படிப்பட்ட கொடிய காரியத்தையும் நிறைவேற்றக் கூடிய மனிதராக இருக்கிறார். அவரோடுகூட ஒரு நிமிஷ நேரம் இருந்து காலம் தள்ளுவது எமவாதனையாக இருக்கிறது. அவருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் பயந்து நான் அவருடைய பிரியப்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அன்றைய தினம் நடந்த விஷயமெல்லாம் அவருடைய துண்டுதலின் மேலேதான் நடந்தது. என் மனசுக்கு முற்றிலும் விரோதமாகவே நான் அன்றையதினம் அந்தக் காரியத்தில் இறங்கினேன்" என்றாள். - ஜெமீந்தார், 'அது இருக்கட்டும். அன்றையதினம் நீ இளவரசரிடத்தில் ஏதோ ஒரு காகிதத்தில் கையெழுத்தும் முத்திரையையும் வாங்கிக் கொண்டாயே, அது எதற்காக?' என்றார். லீலாவதி, 'அது ஒரு மோசக்கருத்தான காரியம். அந்த தஸ்தாவேஜியில் இளவரசருடைய கையெழுத்தை வாங்குவதற்காகவே அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அன்றையதினம் நான் இளவரசரிடம் கையெழுத்து வாங்கின காகிதம் ஒன்றின்மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட இரட்டைக் காகிதம். ஆனால், மேல் பக்கத்திலிருந்த காகிதம் நீளக்குறை வானது. ஆகையால், இளவரசர் கையெழுத்துச்செய்து முத்திரை
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/93
தோற்றம்