உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பூர்ணசந்திரோதயம்-3 வைத்தது அடிக் காகிதத்தில் அடிக்காகிதத்தில் எழுதப் பட்டிருந்த விஷயம்வேறு; மேல் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயம்வேறு. மேல் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயத்தைத்தான் அவர் படித்துப் பார்த்தார். அடியில் இன்னொரு காகிதம் இருந்தது என்பதையும், தாம் கையெழுத்துச் செய்தது அடிக்காகிதத்தில் என்பதையும், அவர் சந்தேகிக்கவே இல்லை. கொஞ்சகாலத்துக்கு முன் என்னுடைய புருஷர் அவருடைய சிநேகிதருள் ஒருவரான கோபண்ணா என்பவரோடு சண்டையிட்டு அவரைக் குத்திக் கொன்று விட்டார். அவருடைய மற்ற சிநேகிதர்கள் அவரை உடனே வெளியில் அனுப்பியதன்றி இந்த ராஜ்ஜியத்தைவிட்டு மைசூர் ராஜ்ஜியத்துக்கு ஒடிப்போகும் படி சொல்லியனுப்பினார்களாம். ஆகையால், அவர் என்னையும் அழைத்துக்கொண்டு மைசூருக்குப் போனார். நாங்கள் அவ்விடத்தில் கொஞ்சகாலம் இருந்தோம். இந்த ஊரைவிட்டு எப்போதும் அவ்விடத்திலேயே இருப்பது அவருடைய மனசுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், அவர் நிரம் பவும் ஆழ்ந்து யோசனை செய்து, ஒருவிதமான தந்திரம் செய்யவேண்டும் என்று முடிவுகட்டிக் கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு எவருக்கும் தெரியாமல் மாரியம்மன் கோவிலில் இருந்த ஒரு பங்களாவில் ஜாகை வைத்துக்கொண்டு உங்களைப் பலவந்தமாக அங்கே கொண்டு வரச் செய்தார்; என்னைப் பார்சீ ஜாதிப் பெண்போல அலங்கரித்து இளவரசரிடம் அனுப்பி அவரை மயக்கி அந்தக் காகிதத்தில் கையெழுத்து வாங்கும்படி வற்புறுத்தினார். நான் அப்படியே செய்து, அவரோடு சம்பந்தப்படாமல், தப்பித்துப் போய்விட்டேன். நாங்கள் சந்தித்த அறையிலிருந்த பீரோக்களுக்குப் பின்னால் மறைவான ஒரு வழி இருக்கிறது. அந்த வழியால் நான் வெளியில் போய்விட்டேன்' என்றாள். ஜெமீந்தார் நிரம்பவும் வியப்பும் விசனமும் அடைந்து, “ஆகா! என்ன மோசம் என்ன வஞ்சகம் இளவரசரிடம் மோசடியாகக் கையெழுத்து வாங்குவதற்காகவா அவன்