பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 நான்தான் போக வேண்டும் என்றும், இன்னாரால் தான் அந்தக் காரியம் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியாதபடி டைரிப் புஸ்தகத்தை உங்களிடம் சேர்த்துவிடுவது அன்றி, உங்களிடம் எப்படியாவது இரண்டாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தே தீரவேண்டும் என்றும் அவர் கட்டாயப் படுத்தி என்னை மிரட்டி பயமுறுத்தினார். அதைத் தடுக்க மாட்டாதவளாய் நான் புறப்பட்டுவந்து, உங்களிடம் பணவுதவி வேண்டினேன். நீங்கள் இரும்புப் பெட்டிக்குப் போன காலத்தில், உங்களுக்குத் தெரியாமல் டைரிப் புஸ்தகத்தைப் புஷ்பத்தொட்டிக்குள் வைத்துவிட்டு, ஒன்றையும் அறியாதவள் போல இருந்தேன். நீங்கள் நல்ல வேளையாக ஐயாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடுத்தீர்கள். நீங்கள் இரண்டாயிரத்துக்குக் குறைவாகக் கொடுத்திருந்தால் என்பாடு திண்டாட்டமாக முடிந்திருக்கும் ' என்றாள். ஜெமீந்தார், "ஆகா! சங்கதி யெல்லாம் எவ்வளவு புதுமையாக இருக்கின்றன! அன்றைய தினம் பூத்தொட்டிக்குள் தற்செய லாக வந்திருந்த டைரிப் புஸ்தகத்தைப் பார்த்தவுடனே எனக்கு உண்டான ஆச்சரியத்தை என்னவென்று சொல்லுவேன்! அன்றையதினம் என்னிடம் நீ வந்திருந்தும் நீதான்வைத்திருப்பாய் என்று நான்கனவிலும்கூட சந்தேகிக்க வில்லை. அந்த விஷயம் இதுவரையில் விளங்காமல் பரம ரகசியமாகவே இருந்து வந்தது. எல்லாம் நீயும் உன் புருஷனும் சேர்ந்து செய்த காரியம் என்பது இப்போதுதான் நன்றாக விளங்குகிறது' என்றார். லீலாவதி, 'அப்பா நானாகவே ஒருநாளும் இப்படிப்பட்ட காரியங்களில் இறங்கக் கூடியவளல்ல. அவருடைய உபத்திரவத்துக்குப் பயந்து கொண்டு நான் அவர்சொன்னபடி செய்துவிட்டேன். என்ன இருந்தாலும், நான் இந்தக் காரியங்களை எல்லாம் செய்தது என்பேரில் சுத்தப் பிசகுதான். நான் கேவலம் கெட்டுப்போன பரமபாதகி என்றுதான் நீங்கள் நினைப் பீர்கள். நீங்கள் மாத்திரமல்ல. இந்த வரலாற்றைக் கேட்கும் சகலமான மனிதரும் அப்படியேதான் மதிப்பார்கள்.