பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பூர்ணசந்திரோதயம்-3 இவ்வளவு தூரம் மானம் அழிந்தபின் நான் இருந்து உயிர்வாழ்வதைவிட இறந்துவிடுவதே உத்தமமான காரியம். நானும் ஒரு மனிஷி என்று பெயர் வைத்துக் கொண்டு உங்களுக்கு எதிரில் எப்படி வந்து, எப்படி வாய் திறந்து பேசுவேன். நான் இனிமேல் எவ்வளவு துரந்தான் திருந்தி நல்ல வழியில் நடந்துகொண்டாலும், என்னிடத்தில் நீங்கள் கொண்டிருக்கும் அருவருப்பும் கெட்ட அபிப்பிராயமும் மாறப் போகின்றனவா? எனக்கு உண்டாயிருக்கும் பெருத்த மானக்கேடும் இழிவும் போகப் போகின்றனவா? ஒருநாளும் இல்லை" என்று கலங்கி உருகிக் கோவெனக் கதறி அழுதவண்ணம் கூறினாள். அவளது பரிதாபகரமான கலங்கிய நிலைமையைக் கண்டு இளகிய சொற்களைக் கேட்ட ஜெமீந்தார் அவளது விஷயத்தில் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த இரக்கமும் சஞ்சலமும் அடைந்து, "அம்மா லீலாவதி விசனப்படாதே எனக்கு இந்த உலகத்தில் உன்னைவிட அருமையான மனிதர் யார் இருக்கிறார்கள்? உன்னைக் காட்டிலும் நெருங்கிய பந்துவும் ஆதரவான மனிதரும் எனக்கு உலகில் இல்லவே இல்லை என்பது உனக்கே தெரிந்த விஷயம். அப்படியிருக்க, நீ இதுவரையில் செய்துள்ள காரியங்களைவிட இன்னம் ஆயிரம் மடங்கு கேவலமான காரியங்களைச் செய்திருந்தால் கூட, உன்னைக் கைவிட எனக்கு மனம் வராது. உன்னுடைய அண்ணன் தான் எனக்கு உதவாமல் அதிகப்பிரசங்கியாகிப் போய்விட்டான். இப்போது இருப்பது நீ ஒருத்திதானே. உன் விஷயத்தில் நான் ஏற்கெனவே என் கடமைகளைச் செய்திருந்தால், நீ இவ்ளவு தூரம் கெட்டுப்போயிருக்கவே மாட்டாய்; எல்லாம் என்னால் விளைந்த துன்பமே அன்றி வேறல்ல. அப்படிப்பட்ட கொடிய துஷ்டனோடு இருக்க வேண்டாம் என்று நான் உன்னைக் கட்டாயப்படுத்தி இங்கேயே வந்திருக்கும் படி செய்திருந்தால், உனக்கு