பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ව්‍රර් இப்படிப்பட்ட இழிவெல்லாம் நேர்ந்திருக்காது. அவனுக்கு இச்சையானால் இங்கே வந்து போகட்டும் என்று நான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் அசிரத்தையாக இருந்து விட்டேன். அதுவே இத்தனைக்கும் காரணம்' என்றார். லீலாவதி, 'இல்லையப்பா? நீங்கள் உங்கள்மேல் குறைகூறுவதற்கு நியாயமே இல்லை. அந்த மனிதனைவிட்டு இங்கேவந்து விடும்படி நீங்கள் எத்தனையோ தடவைகளில் எனக்குப் புத்திமதி சொல்லியிருக்கிறீர்கள். நான்தான் உங்களுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்தேன். அந்த மனிதரிடத்தில் நான் ஆரம்பத்தில் வைத்த பிரேமை யெல்லாம் போகும்படி அவர் என்னை அவ்வளவு குரூரமாக நடத்தினாலும், ஒருவிதப் பாசமும், பயமும் ஒன்றுகூடி அவரைவிட்டு நான் பிரியாமல் இதுவரையில் தடுத்துக் கொண்டுவந்தன. அதுவுமல்லாமல், வேறொரு ரகசியமும் இருக்கிறது” என்று கூறி, அதற்குமேல் விஷயத்தை வெளியிட மாட்டாமல் தயங்கினாள். தான் அதற்குமேல் சொல்லப்போவது தனது வாயில் வைத்துச்சொல்லக்கூடதகாத விஷயமாதலால், அவள் சிறிது நேரம் பேசாமல் மெளனியாக இருந்தாள். அதை உணர்ந்த ஜெமீந்தார் நயமாக வற்புறுத்தி, 'குழந்தாய் லீலாவதி நடந்ததெல்லாம் நடந்துபோய் விட்டது. அநேகமாக உன்னுடைய முக்கியமானரகசியங்களை எல்லாம், நீ என்னிடம் வெளியிட்டுவிட்டாய். இன்னம் மிகுதி இருக்கும் விஷயங் களையும் நீ வெளியிடுவதனால், உனக்கு ஏதேனும் கெடுதல் நேரிடுமோ என்று நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதே இல்லை. உன்னுடைய வரலாறு முழுவதும் எனக்குத் தெரிந்திருப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் தகுந்தபடி நான் முன் ஜாக்கிரதையான விஷயங்களைச் செய்யலாம் அல்லவா?’’ என்றார். £3.5.HH-7