பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பூர்ணசந்திரோதயம்-4 மாட்டீரோ ஒரு பெரிய நியாயாதிபதி செய்திருக்கும் தீர்மானத்தை நீர் ஒப்புக்கொள்ள முடியாது என்று சுலபமாகச் சொல்லிவிட்டால் உம்மை அவ்வளவோடு விட்டு விடுவார்கள் என்று நினைத்தீரா? இப்படியெல்லாம் நீர் ஒரே பிடிவாதமாகப் பேசினால், நாங்கள் உம்மைக் கட்டாயப்படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டீரா? அந்த எண்ணத்தை விட்டுவிடும். நாங்கள் எங்களுடைய மருந்தைப் பிரயோகிக்கத் தொடங்கு வோமே யானால், அதன்பிறகு நீராகவே ஒரு நிமிஷத்தில் வழிக்கு வந்துவிடுவீர். இன்று முழுதும் நான் உமக்கு அவகாசம் கொடுக்கிறேன். நீர் நன்றாக யோசித்து நாளையதினம் காலையில் முடிவைத் தெரியும். இப்போது நான் உம்மை அதிகமாக வற்புறுத்தப் போகிறதில்லை, இவ்வளவோடு போகிறேன்’ என்றார். -

அதைக்கேட்ட கலியாணசுந்தரம், ‘'நான் யோசிப்பதற்கும் நாளையதினம் சொல்வதற்கும் ஒன்றும் பாக்கியில்லை. நான் சொல்லக் கூடியதையெல்லாம் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்லும் ஒப்பந்தத்திற்கும் நான் இணங்கமுடியாது. அந்தப்பெண்ணையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் இப்போதே உங்களுடைய மருந்தை உபயோகிக்கத் தொடங்கலாம், உங்களுடைய மருந்து இன்ன தென்பதும் எனக்குத் தெரியும். என்னை நீங்கள் ஈவிரக்க மில்லாமல் அடித்து வற்புறுத்தப் போகிறீர்கள். நீங்கள் அப்படியே செய்யலாம். அதற்கெல்லாம் நான் பின்வாங்கு கிறவனே அல்ல. என்னை நீங்கள் அணுஅனுவாக வெட்டி சித் திரவதை செய்தாலும், நான் என் மனசாரத் தகாத காரியத்தைச் செய்யமாட்டேன்; செய்வதாக வாயாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன். இது நிச்சயமான வார்த்தை. இதைத்தவிர நான் நாளையதினம் எதையும் சொல்லப் போகிறதில்லை’ எனறான.