பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 OO பூர்ணசந்திரோதயம்-4 முறையிட்டுக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது. அப்படி மேல் நியாயஸ்தலத்துக்கு முறையிட்டுக் கொண்டபின் அவர்களும் அவருக்குப் பிரதிகூலமாகத் தீர்மானம் சொல்லி விட்டால், அதன் பிறகே அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தத் தீர்மானம் இப்படிப்பட்ட வழக்குகளில் எப்படியிருக்க வேண்டுமென்றால், நான் அந்தப் பெண்ணின் கற்பைப் பங்கப்படுத்திவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும், அவளை நான் சம்சாரமாக வைத்துக்கொண்டு ஆயிசுகால பரியந்தம் ரrக்க வேண்டுமென்றும், தவறினால், அவளுக்கு ஜீவனாம்சமோ அல்லது வேறுவிதமான நஷ்ட ஈடோ செய்து கொடுக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வது சட்டப்படி நியாயமாகுமே அன்றி, நான் அவளைச் சம்சாரமாகத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும், வேறு வழியில்லை என்றும் கூறிக் கட்டாயப்படுத்துவது மூடத்தனமே ஒழிய வேறல்ல. நான் அவளைச் சம்சாரமாக அவசியம் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டுமென்று நியாயாதிபதி தீர்மானித்ததால், அந்தத் தீர்மானம் சரியாக நிறைவேறுகிறதா என்று யார் பார்க்கிறது, எப்படிப் பார்க்கிறது? இப்படிப்பட்ட நகைப்புக்கு இடமான தீர்மானத்தை எந்த நியாயாதிபதியும் செய்திருக்க மாட்டார் என்றே நான் துணிந்து சொல்லுவேன். இந்த ஊர் நியாயாதிபதி ஒருவேளை அப்படிப்பட்ட தீர்மானத்தைச் செய்திருப்பதாக வைத்துக் கொண்டாலும், நான் அதன்படி நடந்துகொள்ளத் தவறினால், என்னைப் பைத்தியக்காரப் பெண்பிள்ளைகள் நிறைந்த இடத்தில் கொண்டுபோய், அவர்களுக்கு இரையாக்கி விடவேண்டும் என்று அவர் தம்முடைய தீர்மானத்தில் எழுதியிருப்பார் என்றாவது, அல்லது, அப்படிச் செய்ய

வேண்டுமென்று இந்த தேசத்துச் சட்டங்கள் இடம் கொடுக்கின்றன என்றாவது நான் நினைக்க முடியாது. நீங்களும் அதை ருஜூப்படுத்த முடியாது. ஆகையால், இந்த அக்கிரமச் செய்கை நீங்களாகச் செய்கிறதே அன்றி வேறல்ல. கட்சிக்காரர் விஷயத்தில் மிதமிஞ்சிய சிரத்தை எடுத்துக்கொண்டு நீங்கள்