பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 10 i. இப்படிப்பட்ட அட்டுழியங்களை நிறைவேற்ற வேண்டுமானால், இதற்கு ரகசியமான காரணம் ஏதாவது அவசியம் இருக்க வேண்டும். அதனாலேதான் நீங்கள் ஆரம்பத்திலிருந்தே என்னை யாதொரு குற்றமும் இன்றி சிறைப்படுத்தி யோக்கியமான மனிதர் செய்யத் தகாத மகா இழிவான காரியங்களிலெல்லாம் இறங்கியதன்றி, மேன் மேலும் கொடுமையான காரியங்களைச் செய்ய எத்தனிக்கி lர்கள். நீங்கள் இதுவரையில் செய்துள்ள காரியங்களிலிருந்தும் இப்போது செய்யப் போவதாகச் சொல்லும் காரியங்களி லிருந்தும், நீங்கள் அந்தத் தாதிப் பெண்களுக்கு வேண்டிய மனிதர் என்பது நிச்சயமாக விளங்குகிறது. ஆகையால், உங்களிடம் நான் எவ்வித அனுகூலத்தையாவது நன்மையை யாவது எதிர்பார்ப்பது மூடத்தனம். உங்களிடம் நான் சட்ட வாதம் செய்வதிலாவது நியாயவாதம் செய்வதிலாவது எவ்வித பலனும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சொல்லுகிறபடி நான் அந்தப் பெண்ணைச் சம்சாரமாக ஏற்றுக் கொள்ளவாவது, இந்த ஊரிலேயே இருக்கவாவது இணங்கா விட்டால் நீங்கள் உங்களுடைய கொடிய சதியாலோசனையை நிறைவேற்றியே தீருவீர்கள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. ஆகையால், நீங்கள் உங்களுடைய பிரியம் எதுவோ அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதைப் பற்றி மனிதர் பின் வாங்குவது ஆண்மைத் தனமாகாது. ஆகையால், நான் எதற்கும் அஞ்சப் போகிறதில்லை. தகாத மனிதர்களான உங்களிடம்

நான் எவ்வித அனுகூலத்தையும் நாடிக் கெஞ்சப் போகிற - தில்லை. வருவது வந்தே தீரும். ஆகையால், நீங்கள் செய்வதைச் செய்யலாம்” என்று ஒரே முடிவாகக் கூறினான்.

அவன் அவ்வாறு நிரம் பவும் துஷணையாகவும் இழிவாகவும் பேசியதைக்கண்ட போலீஸ் கமிஷனர் அவன் மீது அளவற்ற கோபமும் குரோதமும் கொண்டவராய் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார். சிறைச்சாலை