பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பூர்ணசந்திரோதயம்-4 யின் கத்வும் மூடி வெளிப்பக்கத்தில் தாளிடப்பட்டது. மறுபடியும் தனிமையில் விடப்பட்ட கலியாணசுந்தரத்தினது மனநிலைமை எப்படி இருந்திருக்கும் என்று வாசகர்கள் எளிதில் யூகித்துக் கொள்ளலாம். போலீஸ் கமிஷனர் வந்ததற்கு முன்னர் ஜன்னலின் வழியாகத் தனக்கு அநாமதேயக் கடிதம் எழுதியது யாராக இருக்கலாம் என்ற யோசனை ஒரு பக்கத்தில் அவனது மனதைக் கவர்ந்து கொண்டது, போலீஸ் கமிஷனர் தன்னிடம் வந்து அபிராமிக்கு அனுகூலமானபிரஸ்தாபங்களைச் செய்ததிலிருந்து, அவளால் அப்படிப்பட்ட சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகத் தோன்றவில்லை. இருந்தாலும், முதலில் அவர்கள் தன்னை அந்தச் சூழ்ச்சி வலையில் புகுத்தி, முடிவில் குற்றம் முழுவதையும் தன் மீது சுமத்தித் தான் நெடுங்காலம் வரையில் அந்தச் சிறைச்சாலையில் இருக்கும் படி செய்ய எத்தனிக்கிறார்களோ என்ற யோசனை தோன்றி அவனது மனத்தை வதைத்தது. அது நிற்க, அபிராமியை அந்த ஊரில் விடுத்து அவளது சகோதரிமார்கள் பூனாவுக்குப் போய் அவ்விடத்திலுள்ள பட்டமகிஷிக்கு அந்நேரம் தீங்கிழைத்திருப் பார்களோ வென்றும், அப்படியானால், தான் அத்தனை பாடுகள் பட்டு அவ்வளவு தூரம் வந்தது வீணாகிவிடுமே என்றும், அவன் பலவாறு எண்ணமிட்டு ஏங்கி வருந்தினான். அந்தப் போலீஸ் கமிஷனரது வஞ்சகச்சிறையிலிருந்து முயன்று யார் மூலமாக வாகிலும் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துப் பூனாவிலுள்ளபட்டமகிஷிக்கு அனுப்பி அம்மாளு, தனம் ஆகிய தாதிப் பெண்களைப் பற்றி எச்சரித்துவிட்டால், அதுவாகிலும் போதுமானது என்று அவன் நினைத்தான். ஆனாலும், எல்லாரும் போலீஸ் கமிஷனருக்கே அடிமையாக இருக்கும் அந்தக் கொடிய சிறைச்சாலையில் தான் எழுதும் கடிதத்தை ரகசியமாக எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கக்கூடிய உண்மையான மனிதர் தனக்கு எங்கிருந்து வாய்க்கப் போகிறார்கள் என்ற கவலையும் ஏக்கமும் தோன்றி மனதைப் புண்படுத்தின. தான் அபிராமியோடு அந்த ஊரிலேயே இருந்துவிட வேண்டும்