பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. - பூர்ணசந்திரோதயம்-4 மனம் சதாகாலமும் பலவகைப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்து புண்பட்டிருக்க அவனது கவலைகளும் சந்தேகங்களும் பெருகிக் கொண்டே போயின. அதற்குமுன் எழுந்து தனது காரியங்களைத் தானே கவனிக்கத் தகுந்த நிலைமையிலிருந்த அவனது உடம்பு படுக்கையை விட்டு விலகி அப்பால் போய் உட்காருவதேசாத்திய மற்றதாகிவிட்டது. இருந்தாலும், அவன் அப்பால் போய்த் தனது காலைக் கடமைகளை முடித்துக் கொண்டு முற்றிலும் கலவரமடைந்த உளத்தினனாய்த் தனது விசிப்பலகையின் மீது உட்கார்ந்து ஒய்ந்து சுவரில் சாய்ந்து கொண்டான். அரைநாழிகை நேரம் சென்றது. அவன் அசைவற்று உயிரற்ற சித்திரப் பாவை போல ஒரே நிலையில் காணப்பட்டான். அவனது மூச்சு பெருமூச்சுகளாக வந்து கொண்டிருந்தது. கண்ணிர் இரண்டு கண்களினின்றும் பொங்கி அருவிபோல இரண்டு கன்னங்களின் வழியாகக் கீழே வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவன் அடிக்கடி தனது கவலைகளை எல்லாம் விடுத்துத் தனது கவனத்தைக் கடவுளின் மீது செலுத்தித்தான். எவ்விதமான தவறுகள் செய்திருந்தாலும், அவைகளை மன்னித்துத் தனது இடர்களைக் களைந்து, தன்னைக் காத்தருளவேண்டும் என்று மனதுருகி ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருந்தான்.

அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் இருந்த விடுதியின் கதவு திறக்கப்பட்டது. அந்த ஓசையைக் கேட்ட கலியாண சுந்தரம் திடுக்கிட்டு, அங்கே வந்தது யார் என்று திரும்பிப் பார்த்தான். தான் நோயாகப்படுத்தது முதல் தனது பணி விடைகளைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்ததாதி தனது வழக்கப்படி அன்றைய தினம் காலையிலும் அவனுக்குச் செய்ய வேண்டிய செளகரியங்களைச் செய்து கொடுப்பதற்காக அங்கே வந்தாள். அவளைக் கண்டவுடனே கலியாணசுந்தரம் தனது கண்ணிரைத் துடைத்துக்கொண்டு சாதாரணமாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். அவள் வழக்கப்படி அந்த விடுதியின்