பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பூர்ணசந்திரோதயம்-4 ஆவல் கொண்டிருப்பவள் போலவும் காணப்பட்டாள். அதுவரையில் உயிரே இல்லாதிருந்தவள் போலக் காணப் பட்ட அந்தத் தாதி திடீரென்று தனது முகமலர்ச்சியால் அவனிடத்தில் அன்பும் அனுதாபமும் நிரம்பவும் காட்டியதைக் கலியாணசுந்தரம் ஒரு விநாடி நேரத்தில் உணர்ந்து கொண்டான். ஆனாலும் அது கனவோ நினைவோ என்ற சந்தேகம் அவனது மனதில் உதித்தது. அவள் தனக்கு அனுகூலமாக இருப்பாளோ, அல்லது அந்தக்கடிதம் தலையணையின் கீழ் இருந்ததிலிருந்து தன்மீது பெருத்த சந்தேகங்கள் கொண்டு அதைக் கமிஷனரிடம் சொல்லாமல் மறைத்து வைப்பதை ஒரு பெருத்த கருணையாக நினைத்து அதற்குக் கைம்மாறாக அவள் தன்னிடம் ஏதாவது தகாத விஷயங்களைப் பிரஸ்தாபிப்பாளோ என்றும், வேறு பலவிதமாகவும் கலியாணசுந்தரம் எண்ணமிட்டு அந்தக் கடிதம் ஜன்னலின்வழியாக உள்ளே போடப்பட்ட விவரத்தை எல்லாம் தான் அவளிடம் முன்னாகச் சொல்லிவைப்பதே உசிதம் என நிச்சயித்துக்கொண்டு அவளிடம் நயமாகப் பேசத் தொடங்கி, ‘இத்தனை நாளும் இல்லாமல் நான் ஏதோ ரகசியமான ஒரு வஸ்துவை இங்கே ஒளித்து வைத்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டு விடாதே. இது அப்படி விசேஷமான வஸ்து ஒன்றுமில்லை. நேற்றுதினம் இந்தக்கடிதத்தை இதோ இருக்கும் ஜன்னலின் வழியாகத் திடீரென்று யாரோ உள்ளே போட்டுவிட்டு அப்பால் போய்விட்டார்கள். நான் பார்த்து ஆச்சரியம் அடைந்து இதற்குள் என்ன இருக்கிறதென்று பார்க்க வேண்டுமென்று நினைத்து இதை எடுத்துப் பார்த்தேன். என்னை இந்தச் சிறைச்சாலையிலிருந்து விடுவிப்பதற்கு யாரோ பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற சங்கதி இதில் எழுதப்பட்டி ருக்கிறது. முன்னே ஒருதரம் இதுபோலவே எனக்கு ஒரு கடிதம் வந்தது; அதிலிருந்து பிரமாதமான அநர்த்தங்கள் எல்லாம் விளைந்தன. அதுபோலவே இதுவும் என்ன விதமான பெருத்த அபாயத்துக்கு முன்னறிகுறியோ தெரியவில்லை. இதை என்ன செய்வதென்பதை அறியாமல்