பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பூர்ணசந்திரோதயம் - 4 அடையாளங்களைக்கொண்ட மனிதர்களை நான் பார்த்திருப்ப தாகவே நினைவு உண்டாகவில்லையே! சரி; இருக்கட்டும். அவர்களிடம் நீ நேற்று இங்கே கடிதம் போட்டதைச் சொல்லி இருப்பாயே; இப்போது நீ புறப்பட்டு இங்கே வந்தபோது அவர்கள் ஏதாவது சங்கதி சொல்லி அனுப்பினார்களா?

தாதி:- நேற்றைய தினம் நான் ஜன்னலின் வழியாகக் கடிதத்தைப் போட்ட விவரத்தைக்கேட்டு அது முதல் அவர்கள் நிரம்பவும் கவலை கொண்டிருக்கிறார்கள். கடிதம் உங்களிடம் வந்து சேர்ந்திருக்குமோ, அல்லது, வேறே யாரிடத்திலாவது அகப்பட்டிருக்குமோ என்று அவர்கள் சந்தேகப்பட்டு, அந்தச் சந்தேகம் தீர்ந்தபிறகு தான் மறுபடியும் செய்தி சொல்லி அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ளு கிறேனோ, அல்லது மோசம் செய்து விடப்போகிறேனோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறதாகத் தெரிகிறது. ஆகையால் நேற்று அவர்கள் அனுப்பிய கடிதம் உங்களிடம் ஒழுங்காக வந்து சேர்ந்து விட்டது என்றும், என்னை நம்பலாம் என்றும் நீங்கள் இப்போது ஒரு கடிதம் எழுதியனுப்பினால், நான் அதைக் கொண்டு போய் அவர்களிடம் சேர்த்துவிடுகிறேன். அதன்பிறகு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும் கடிதம் ஏதாவது கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டும் நான் மறுபடியும் சாயுங்காலம் வந்து சேருகிறேன்என்றாள்.

அதைக் கேட்ட கலியாணசுந்தரம் தான் என்ன செய்வது என்பதைப்பற்றி சிறிதுநேரம் யோசனை செய்தான். அந்தத்தாதி உண்மையான மனிஷியா, அல்லது அபிராமி முதலிய கூத்தாடிப்பெண்களின் தூண்டுதலினாலோ, அல்லது, போலீஸ் கமிஷனரின் சூழ்ச்சியினாலோ தன்னிடம் மோசக் கருத்தாக நடந்து கொள்ளுகிற கபட்டு மனுஷியா என்ற சந்தேகம் பெரிதாக எழுந்து வருத்தியது. ஆனாலும், தனது சந்தேகத்தை