பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 115 திரும்பி வருவாள் வருவாள் என்ற ஆவலினால் வெதும்பி நலிந்து அன்றைய பொழுதைப் போக்கினான். மாலை நேரம் வந்தது. திடீரென்று வாசற்கதவு திறக்கப்பட்டது. வழக்கப்படி தாதி வருகிறாள் என்று அவன் எண்ணி சடேரென்று எழுந்து உட்கார்ந்து மகிழ்ச்சியினாலும், ஆவலினாலும் மலர்ந்த முகத்தோடு கதவின் பக்கம் திரும்பி நோக்க ஒரு பாராக்காரன் தன்னை நோக்கி உள்ளே வந்தது தெரிந்தது. அவனைக் கண்ட உடனே கலியாணசுந்தரத்தினது முகம் சடக் கென்று மாறு பட்டது. சந்தோஷம் ஒரு நிமிஷத்தில் பறந்துபோயிற்று. மறுபடியும் அவனது முகம் கவலையும் வாட்டமும் கொண்டு சுருங்கியது. ஒவ்வொரு மாலையிலும் வழக்கமாக வந்து கொண்டிருந்த தாதி வராமல் போனதும், என்றைக்கும் இல்லாமல் பாராக்காரன் வந்ததும் ஏதோ விபரீதத்தைச் சுட்டின. ஆகையால், அந்தப் பாராக்காரன் அவனிடம் நெருங்கி வந்து கொண்டிருந்த அந்த அற்ப காலம் அவனுக்கு ஒரு கற்பகாலம் போலத்தோன்றி அவனது மனதைப் புண்படுத்தியது. அவன் எவ்விதமான செய்தி சொல்ல வருகிறானோ என்ற கவலையும் தான் தாதியினிடத்தில் கொடுத்த கடிதம் போலீஸ் கமிஷனரிடத்தில் போய்ச் சேர்ந்திருக்குமோ என்ற பெரும் பீதியும் எழுந்து அவனது மனதைக் கப்பிக் கொண்டன. ஆகவே, அவன் பிரமித்துக் கலங்கி மெளனமாக அப்படியே பாராக்காரனைப் பார்த்தபடி நின்றான்.

அடுத்த நிமிஷத்தில் அந்தப் பாராக்காரன் நமது கலியாண சுந்தரத்தினிடம் நெருங்கி வந்து நின்று ஒரு கடிதத்தை நீட்ட, கலியாணசுந்தரம் மட்டற்ற ஆவலும் ஆச்சரியமும் அடைந்த வனாய், அதை வாங்கிப் பிரித்துப் படிக்கத் தொடங்கினான். அவனது கைகளும் உடம்பும் வெடவெட வென்று நடுங்கின. இருதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது. மனம் முற்றிலும் குழம்பித் தவித்தது. அந்தக் கடிதம் யாரால் எழுதப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்ளவேண்டுமென்ற