பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பூர்ணசந்திரோதயம்-4 மறுமொழியைத் தவிர வேறே அதிகமாகச் சொல்ல புதிய விஷயமும் எதுவுமில்லை.

கலியாண சுந்தரம்.

-என்று அவன் அதற்கு உத்தரம் எழுதி அந்தக் கடிதத்தையும் பென்சிலையும் பாராக்காரனிடம் நீட்ட, அவன் அவைகளை வாங்கிக் கொண்டு அதற்குமேல் எதைப்பற்றியும் பேசாமல் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டான்.

அவன் போனபிறகு கால் நாழிகை சாவகாசம் சென்றது. அவ்விடத்தைவிட்டுக் காலையில் சென்ற தாதி தனது வழக்கப்படி மறுபடியும் அவனண்டை வந்து சேர்ந்தாள். அவளைக்கண்டவுடனே கலியாணசுந்தரத்தின் மனதில் பலவித எண்ணங்கள் பொங்கி எழுந்தன. அவள் எவ்விதமான மறுமொழி கொணர்ந்திருப்பாளோ என்றும் அவள் மூலமாக நடக்கும் கடிதப் போக்குவரத்து விஷயம் போலீஸ் கமிஷன ருக்குத் தெரிந்ததாக இருக்குமோ என்றும், போலீஸ் கமிஷனர் தன் விஷயத்தில் செய்ய எண்ணியிருக்கும் பயங்கரமான கொடிய செய்கை நிறைவேறு முன் வெளியிலுள்ள நண்பர்கள் தன்னை எப்படித் தப்பவைக்கப் போகிறார்கள் என்றும் அவன் பலவாறு சஞ்சலம் அடைந்தவனாய் ஆவலே வடிவாயிருக்க, அவனண்டை நெருங்கி வந்த தாதி தனது இடையில் சொருகப்பட்டிருந்த ஒரு சிறிய கடிதத்தை வெளியில் எடுத்து அவனிடம் கொடுத்தாள். -

அவன் விரைவாக அதை வாங்கிப் பிரித்துப் படிக்க, அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது.

ஐயா! நீங்கள் எழுதியனுப்பிய சுருக்கமான மறுமொழி அடங்கிய கடிதம் வந்து சேர்ந்தது. நாங்கள் யார் என்பதையும் எங்களை யார் அனுப்பியது என்பதையும் முதலில் நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவது இயற்கையே. அந்த விவரத்தை நாங்கள் வெளியிடாத வரையில் நீங்கள் எங்கள் வார்த்தையில்