பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பூர்ணசந்திரோதயம்-4 கமிஷனர் என்னிடம் பிரஸ்தாபித்தார். நான் அதற்கு - இணங்கவில்லை. அவர் சொன்னபடி நான் செய்யாவிட்டால், என்னை இந்த ஊரிலுள்ள பைத்தியக்கார வைத்தியசாலைக்குள் கொண்டுபோய் அடைத்து விடுவதாக அவர் பயமுறுத்தி விட்டுப் போனார். இப்போது மறுபடியும் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். நான் அவர்களுடைய பிரரே பணைகளுக்கு இணங்கி வராவிட்டால், நாளையதினம் இரவு பதினோரு மணிக்கு என்னை இவ்விடத்திலிருந்து பைத்தியக் கார வைத்தியசாலைக்குக் கொண்டுபோகத் தீர்மானித்தி ருப்பதாக அவர் கடிதத்தில் எழுதியிருக்கிறார். நானும் அதற்கு மறுமொழி எழுதி அனுப்பிவிட்டேன். அவர் சொல்லுகிறபடி நான் செய்ய முடியாதென்றும், அவர் என்னை எவ்விடத்திற்காவது அனுப்பலாம் என்றும் நான் எழுதித் தெரிவித்து விட்டேன். அநேகமாய் அவர் என்னை நாளைய தினம் இவ்விடத்தை விட்டு அனுப்பிவிடுவார் என்றே நினைக் கிறேன். ஆகையால், நீங்கள் இனி என் விஷயத்தில் பிரயாசை எடுத்துக் கொள்வதில், எவ்வித அனுகூலமும் ஏற்படும் எனத் தோன்றவில்லை. என் தலைவிதிப்படியே எந்தக் காரியமும் நடக்கும். ஆதலால், அதைப் பற்றி நீங்கள் வீண் பிரயாசை எடுத்துக் கொள்வதினாலாவது அநாவசியமாக விசனிப்பத னாலாவது அந்த விதி மாறப் போகிறதில்லை. ஆகையால், என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும்; அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவும் இல்லை; அஞ்சவுமில்லை.

இங்ஙனம், கலியாணசுந்தரம். என்று அவன் ஒரு கடிதம் எழுதி அதை மடித்து நன்றாக ஒட்டி அந்தத் தாதியினிடம் கொடுத்து அனுப்பிவிட்டான்.

ஆனால், அவள் கடிதத்தை எடுத்துக்கொண்டு போனபிறகு கலியாணசுந்தரத்தின் மனதில் இன்னொரு கவலை திடீரென்று