பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125 ஒரு துணிவும் ஏற்பட்டது. ஆகவே, அவன் மாறி மாறி நம்பிக்கையும் அவநம்பிக்கையும் இன்பமும் துன்பமும் அடைந்து கலவரத்தில் ஆழ்ந்திருந்தான். மாலை நேரம் கழிய இரவு வந்தது. பதினோராவது மணி எப்போது வரும் வருமென்று அவனது மனம் பெருத்த ஆவலினால் வதை பட்டது. சரியாகப் பத்தே முக்கால் மணிநேரமாயிற்று. அவனது விடுதியின் வாசற்கதவு சடேரென்று திறந்துகொண்டது. அடுத்த நிமிஷம் போலீஸ் கமிஷனர் கலியாணசுந்தரத்தினிடம் வந்து சேர்ந்தார்.

அவர் உண்மையில் தனது வீம்பை நிறைவேற்றுவாரோ என்று அதுகாறும் நினைத்திருந்த கலியாணசுந்தரத்தின் சந்தேகம் உடனே நிவர்த்தியாயிற்று. அவர் எப்படியும் தமது வீறாப்பு மொழியைக் காரியத்தில் செய்தே காட்டப் போகிறார் என்பது நிச்சயப்பட்டது. அவனும் தனது மனவுறுதியை இழக்காமல் உடனே எழுந்துநின்று, ‘சரி; நானும் இதோ தயாராக இருக்கிறேன்; புறப்படலாம்’ என்றான். -

அந்த வீரமொழியைக்கேட்ட போலீஸ் கமிஷனர் நிரம்பவும் திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார். ஆனாலும், அவனிடம் நயமாகப் பேசத்தொடங்கி, “ஐயா! நான் சொன்னபடி சரியான காலத்தில் இங்கே வந்ததிலிருந்து, நான் இந்த விஷயத்தை அலட்சியமாக விட்டுவிடக்கூடாத பரமசங்கடமான நிலைமையில் இருக்கிறேன் என்பது உமக்குத் தெரியலாம். நியாயாதிபதி செய்த தீர்ப்பையும் போலீஸ் சட்டத்தையும் நான் நிறைவேற்றியே தீரவேண்டியவனாக இருக்கிறேன். ஆனாலும், உம்மை மகா பயங்கரமான அந்தப் பைத்தியக்கார வைத்திய சாலைக்கு அனுப்ப மாத்திரம் என் மனம் இடம் கொடுக்க வில்லை. ஆகையால், நான் கடைசிமுறையாக உம்மிடம் நேரில் பேசி உம்முடைய முடிவைத் தெரிந்து கொண்டு மேல் காரியத்தைத் தொடங்கப் போகிறேன். நீர் கடைசி முடிவாகச் சொல்லிவிடும். நான் சொன்னபடி ஒப்பந்தத்தில் கையெழுத்துச்