பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 9

பார்ப்பவர்கள் எங்கள்மேல் குறை கூறவே மாட்டார்கள். அவர் செய்தது பெரிய கொலைக்குற்றம். அதை யாரும் மறைக்க முடியாது. அதுவுமன்றி, அவர் மாரியம்மன் கோவிலில் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று ஒர் அநாமதேயக் கடிதம் நியாயாதிபதிக்கு வந்து சேர்ந்தது. அவர் அதை எங்களுக்கு அனுப்பி உங்கள் புருஷரைப் பிடித்துக் கொண்டு வரக் கட்டளையிட்டார். அதைச் செய்ய நாங்கள் எப்படி மறுக்கிறது? எங்களுடைய கடமையை நாங்கள் செய்யாவிட்டால் எங்களுடைய உத்தியோகம் போய் விடும். நாங்கள் என்ன செய்கிறது! அந்த விஷயத்தில் நீங்கள் எங்கள்மேல் குறை கூறுவதற்குக் கொஞ்சமும் ஏதுவில்லை. ஆனாலும், உங்கள் புருஷருக்குத்தண்டனை ஏற்பட்டதைப் பற்றி நீங்கள் நிரம்பவும் விசனமடைந்து கலங்கி இருக்கும் இந்தச் சமயத்தில், நான் உங்களிடம் பேச வருவது என்மேல் பிசகுதான். ஆகையால், நான் உங்களிடம் அதிகமாகப் பேசப்போகிறதில்லை. அரைக்கால் நாழிகை சாவகாசத்துக்குள் சங்கதியைச் சொல்லி விடுகிறேன். மன்னிக்கவேண்டும் என்று பீடிகை போட்டுப் பேசினார்.

அவர் நிரம்பவும் நயமாகவும் பணிவாகவும் பேசியதைக் கண்டு ஒருவாறு தெளிவடைந்த லீலாவதி, ‘உங்கள் மேல் நாங்கள் வருத்தப்படுவதில் பயனென்ன? எங்கள் தலைவிதியை நோக வேண்டுமேயன்றி மற்றவரை நோவது முட்டாள்தனம். போனது போகட்டும். நீங்கள் இப்போது வந்த காரியத்தைச் சொல்லுங்கள்’ என்றாள். -

உடனே இன்ஸ் பெக்டர் நயமாகப் பேசத் தொடங்கி, “வேறொன்றுமில்லை. சில மாசங்களுக்கு முன் நம்முடைய பவானியம்மாள்புரம் ஜெமீந்தார் ராமலிங்கம் பிள்ளை திடீரென்று காணாமல் போய்விட்டார் என்ற விஷயம் உங்களுக்கும் எட்டி இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் இன்ன இடத்துக்குப் போனார் என்பதாவது, அவர்