பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 127 நந்தன. கலியாணசுந்தரம் ஏறி வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டவுடனே கதவு மூடித் தாளிடப் பெற்றது. உடனே வண்டி புறப்பட்டு விரைவாகச் செல்லத் தொடங்கியது. வண்டிக்குள் கலியாணசுந்தரத்தோடுகூட வேறு இரண்டு மனிதரும் உட்கார்ந்துகொண்டிருந்தனர். உள்ளே இருந்த விளக்கின் வெளிச்சத்தில் அவர்களுடைய உருவம் கலியான சுந்தரத்துக்கு நன்றாகத் தெரிந்தது. ஆகையால், அவர்களுள் ஒருவர் இன்னார் என்பதைக் கலியாணசுந்தரம் உடனே கண்டு கொண்டான். சுமார் ஒன்றரை மாதகாலத்துக்கு முன், அந்த ஊர்ச் சத்திரத் தண்டையில் தன்னைச் சிறைப்படுத்திய போலீஸ் அதிகாரியான முரட்டு மனிதன் ஒருவன் என்பதை அவன் உடனே உணர்ந்தான். மற்றவர் இன்னார் என்பதை அவன் அறிந்து கொள்ளக்கூடவில்லை. அவர்கள் இருவரும் போலீஸ் உடைகள் அணியாமல், சாதாரண உடைகளையே அணிந்து கொண்டிருந்தனர். அவனைச் சத்திரத்தண்டை சிறைப்படுத்திய மனிதன் அவனைக் கண்டவுடனே அவனோடு மரியாதை யாகவும் நயமாகவும் பேசத்தொடங்கவே, நிரம்பவும் கொடிய அக்கிரமஸ்தர்களான அந்தப் போலீஸ் சிப்பந்திகளினிடத்தில் வாய் திறந்து பேசவும் மனமற்றவனாய், கலியாணசுந்தரம் அருவருப்போடு வாய் திறந்து அன்பற்ற இரண்டொரு வார்த்தைகளால் சுருக்கமாக மறுமொழி கூறினான்.

அவ்விடத்தை விட்டுப் புறப்பட்ட வண்டி அந்த ஊருக்கு அருகில் இருந்த பெரிய ஏரியின் கரை வழியாகச் சிறிது தூரம்சென்று, அவ்விடத்திலிருந்து பிரிந்து செல்லும் மரமடர்ந்த சாலையில் திரும்பி எதிரிலிருந்த கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு பதினோருமணி சமயமானாலும், ஏராளமான வண்டிகள் அங்குமிங்கும் தாறுமாறாகப் போய்க் கொண்டிருந்தன. ஆகையால், கலியான சுந்தரத்தைக் கொண்டுபோன வண்டியைத் தொடர்ந்து வேறு வண்டியாவது மனிதராவது வந்ததாகத் தோன்றவில்லை.

go.IV-9