பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i29 வண்டிக்குள் உட்கார்ந்திருந்த போலீஸ் சிப்பந்திகள், கலியாண சுந்தரம் தங்களோடு சம்பாவிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்தவராய் மெளனத்தில் ஆழ்ந்து போயினர். ஆனாலும், அவர்கள் அசட்டையாகவும் துயிலில் ஆழ்ந்து போகாமல், நிரம்பவும் விழிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை அவர்களினது விழிப்பான முகத்தோற்றம் நன்றாகக் காட்டியது.

அவர்கள் சிறைச்சாலையை விட்டுப் புறப்பட்டபின் சுமார் ஒரு மணிநேரம் பிரயாணம் செய்திருப்பார்கள். அப்போது வண்டியின் பின்பக்கத்தில் வெகுதுரத்திற்கு அப்பால் ஏதோ ஒர் ஓசை உண்டாவதாகத் தோன்றியது. அந்த ஓசை நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்துத் தோன்றவே, வண்டிக்குள் இருந்த மூவரும் தங்களது கவனத்தையும் வழியையும் பின்புறத்தில் திருப்பி, அது என்னவென்பதை அறிந்து கொள்ள எத்தனித்தனர். இரண்டொரு நிமிஷ நேரம் கழிந்தது. இறுகலான அந்தத் தரையில் குதிரையின் குளம்புகள் தடதடவென்று அடித்துக் கொள்ளும் விரைவான ஓசை அவர்களுக்குப் பின்புறத்தில் உண்டாயிற்று. அடுத்த நிமிஷத்தில் யாரோ ஒரு மனிதர் ஒரு குதிரையின் மேலேறிக் கொண்டு காற்றாய்ப் பறந்து வந்து பொறிதட்டும் நேரத்தில் அந்தப்பெட்டி வண்டியைக் கடந்து முன்னால் போனதை அவர்கள் கண்டனர். ஆனால், அந்தக் குதிரை வெள்ளையா சிவப்பா என்பதையாவது, அதன் மேலிருந்த மனிதர் யார் என்பதையாவது அவர்கள் அறிந்து கொள்ளும் முன், அந்தக் குதிரை மாயமாகப் பறந்து முன்னால் ஒடிப்போய் விட்டது.

அதைக்கண்ட போலீஸ்காரர்களுள் ஒருவன் வண்டியின் ஜன்னலைத் திறந்து கொண்டு முன்னால் பார்த்தவண்ணம், “என்ன ஆச்சரியம் குதிரை எவ்வளவு வேகமாகப் போகிறது! பார்ப்பதற்குள் கண்பொறி கலங்கிவிடும் போலிருக்கிறதே! இவ்வளவு விசையாகப் போகிறவர் யாராக இருப்பார்கள்!'