பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பூர்ணசந்திரோதயம்-4 என்று கூறிய வண்ணம் வியப்போடு கவனிக்க, குபிரென்று உள்ளே நுழைந்த காற்று அவனது மார்பின் ஆடையை உயர்த்தி விட்டது. அந்த மனிதன் தனது இடுப்பில் பயங்கரமான பிஸ்டல்கள் என்னும் சிறிய கைத்துப்பாக்கியில் இரண்டு சொருகிக்கொண்டிருந்து கலியாணசுந்தரத்தின் திருஷ்டியில் பட்டது. சிறிது நேரத்தில் அந்தப் போலீஸ் சிப்பந்தி ஜன்னலை மூடிவிட்டுத் தனது இடத்தில் உட்கார்ந்துகொண்டான். அவ்வாறு திடீரென்று குதிரை தோன்றி அதிவிரைவாக முன்னால் போனதைப் பற்றி அவர்கள் மூவரும் பெரிதும் வியப் புற்றுச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த தருணத்தில் முன் உண்டானதுபோல இன்னொரு புதிய ஓசை பின்புறத்தில் உண்டாயிற்று. அதைக்கேட்டு அவர்கள் முன்னிலும் பன்மடங்கு அதிகம் திடுக்கிட்டு, இப்போது வருகிறது யார் என்பதை யாவது நன்றாகக் கவனித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உற்றுக் கவனிக்கலாயினர். முன்னேஜன்னலின் கதவைத் திறந்து பார்த்த போலீஸ் சிப்பந்தி மறுபடியும் எழுந்து ஜன்னலின்கதவைத் திறந்து வெளியில் பார்க்க முயல, அதற்குள் இன்னொரு குதிரை மகா வேகமாக வந்து வண்டியைக் கடந்து அப்பால் போய்விட்டது. அதன் மேலும் யாரோ ஒரு மனிதர் உட்கார்ந்திருந்தது மாத்திரம் தெரிந்தது.

வண்டிக்குள் இருந்த போலீஸ் சிப்பந்திகள் இருவரும் அந்தப் புதுமையான சம்பவத்தைப் பற்றித் தமக்குள் நிரம்பவும் வியப்பாகப் பேசிக் கொள்ளத் தொடங்கினர். ஒருவன் மற்றவனை நோக்கி, ‘இவ்வளவு வேகமாகப் போகிறவர்கள் யாராக இருக்கலாம்? ஒருவேளை ராஜாங்கத்தாரால் அவசரமாக எவ்விடத்துக்காவது அனுப்பப்பட்ட சாரணர்களாக இருப்பார்களா?’ என்றான்.

மற்றவன், ‘அப்படியிருந்தால், அவர்கள் தன்னுடைய உத்தியோக உடுப்புகளைப் போட்டுக் கொண்டிருப்பார்களே!