பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135 வசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்தப்புரம் தேவேந்திரனது பட்டமகிஷியான இந்திராணி, ரதிதேவி முதலியோர் வசிப்பதற்குத் தகுந்ததும், மயன் முதலிய தெய்வத் தச்சர்களால் அமைக்கப்பட்டதுமான தேஜோன்மய நவமணிமாடமாக இருந்தது. அதுகாறும் அந்த அரண்மனையிலிருந்து காலஞ் சென்ற அதிவீரதீர பராக்கிரமசாலிகளான மகா மண்டலேசுவரர்கள்தங்களது உயிருக்குயிராக மதித்து, அளவற்ற வாஞ்சையும், பிரேமையும் பாசமும் கொண்டுதங்களது இருதய கமலங்களில் வைத்துத்தங்களது குலதெய்வங்கள்போல மதித்து ஒப்புயர்வற்ற சிறப்பான மகோன்னத பதவியில் வைத்து சகலமான இன்ப சுகங்களையும் மழைபோலப் பொழிந்து இமைகள் கண்மணியைக் காப்பதுபோலப் பாதுகாத்து வந்த மகாமகா சிரேஷ்டமான பட்டமகிஷியரும் தங்களது சொப்பனத்திலும் கண்டறியாத நிகரற்ற ஒரு பளிங்கு மாடத்தில் வெல்வெட்டு போர்த்த சொகுசான பஞ்சு மெத்தைகள் பரப்பப் பெற்ற தரையில் நமது பூர்ணசந்திரோதயம் தோகை விரித்த கலாப மயில் போல உலாவி வந்தாள். -

அவளது நிகரற்ற மேம்பாடுகளுக்குத் தக்கதாய் இருக்க வேண்டுமென்ற கருத்தோடு இளவரசர் அந்த அரண்மனையில் தமது முன்னோர்களால் அரும்பாடுபட்டுத் தேடப்பட்டிருந்த மகா சிரேஷ்டமான அபூர்வ வஸ்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்து, அவளது ஆனந்தத்தையும் சுகத்தையும் மனத்திருப்தி யையும் கருதி அவ்விடத்தில் வைத்து அற்புதமாக அலங்கரித்திருந்தார். மருங்காபுரி ஜெமீந்தாரது வெல்வெட்டு மாடம், ரதிகேளி விலாசம், இளவரசரது கந்தருவ மண்டபம் முதலிய ஒப்பற்ற விடுதிகளெல்லாம், பூர்ணசந்திரோதயத்தின் பளிங்கு மாடத்துக்குமுன் ஈடுநிற்க மாட்டாது பின்னிட்டன. சுவர்களெல்லாம் தங்க முலாம் பூசப்பெற்று நவரத்னக் கற்களால் இழைக்கப்பட்டிருந்தன. சந்தன மரம், தந்தம், அகில் முதலியவற்றாலானகம்பங்கள், பலகணிகள், கதவுகள் முதலிய