பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பூர்ணசந்திரோதயம்-4 யாவும் பச்சை, மரகதம், கோமேதகம் முதலியவற்றால் இழைக்கப்பட்டு மகாமகா விசித்திரமான எண்ணிறந்த பதுமை களைக் கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் பளிங்குகளும், வைர வைடுரியங்களும் நிறைந்து கோடானு கோடி காத தூரம் பரவியுள்ள ஆகாயவட்டத்தில் நிறைந்துள்ள நகrத்திரங் களெல்லாம் ஒன்று கூடி வந்து அந்த அந்தப் புரத்திலுள்ள பூர்ணசந்திரனைச் சுற்றிலும் செறிந்து புடை சூழ்ந்திருக் கின்றனவோ என்று ஐயுறும் படி அந்த மாடம் முழுதும் குபேரனது ஆபரணப் பெட்டி போல நிரம் பவும் தேஜோ மயமாக விளங்கியது. அதுபோலவே, அவளது அழகிய வசீகர மேனியிலும் வைரங்களும், ஜரிகைகளும், தங்கமும், பட்டுமே மயமாகக் காணப்பட்டு அந்த அதியுன்னத மோகனாங்கி மண்ணுலகில் மானிடர் வயிற்றில் ஜனித்த எழில் நங்கையோ, அல்லது ஆகாயத்தில் தெய்வ விமானத்தில் அமர்ந்து பவனி வரும் வானுலகத்து அமரர் மங்கையோ என்ற ஐயத்தையும், பெருத்த பிரமிப்பையும் உண்டாக்கத் தக்கனவாக இருந்தன.

அவள் அதற் குமுன் வசித்த ஜெகன்மோகன விலாசத்தி லிருந்த அவளது ஆருயிர்த் தோழர்களான பஞ்சவர்ணக்கிளிகள் முதலிய ஆகாய வாசிகள் எல்லோரும் அவளோடு கூடவே வந்து சதாகாலமும் குதூகலம் நிறைந்தவராகவே இருந்தனர்.

அவள் இருந்த விநோத மணிமண்டபத்தில் எங்கு பார்த்தாலும் சம்பங்கிக் கொடிகளும், பவழக்கொடிகளும், மனோரஞ்சிதக் கொடிகளும் பந்தல்களிலும் சாமான்களிலும் ஏற்றிவிடப்பட்டு மனோக்கியமான புஷ்பங்கள் நிறைந்து குளிர்ச்சியையும் இன்பத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தன. பத்திபத்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த புஷ்பச் செடிகள் தளிர்த்து வளர்ந்து அடர்ந்து ரோஜா, மல்லிகை முதலிய மலர்களை மனோகரமாக ஏந்திச் சுமந்து நறுமணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அவ்விடத்திலிருந்த பஞ்சணைகளி னின்றும் ஆடைகளினின்றும் எழுந்த அத்தர், பன்னீர், கலவை