பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1.37 முதலிய பரிமள கந்தங்களின் அரிய மணம் கமகமவென்று கமழ்ந்து கொண்டிருந்தமையால், அவ்விடம் சதாகாலமும் டிரம்மாநந்த மயமாகவே இருந்தது.

மகா சிரேஷ்டமாக இருந்த அந்த உன்னத எழில் மாடத்தில் சகல வைபவங்களும் பரிபூரணமாகச் சூழ இனிதிருந்த நமது பூர்ணசந்திரோதயம் அவ்விடத்தில் உண்மையிலேயே ஒரு பெரிய சக்கரவர்த்தினிபோல நடத்தப்பட்டு வந்தாள். அவள் காலால் இடும் வேலையைத் தலையாலே ஏற்று உத்தர கடினத்தில் நிறைவேற்றுவதற்கு எண்ணிறந்த தாதிமார் நியமிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த தாதிகள் எல்லோரும் அதி அற்புதமான அழகும், யெளவனப் பருவமும், பணிவும், இதர நற்குணங்களும், விலை மதிப்பற்ற சிறந்த ஆடை ஆபரணங்களும் நிறைந்து தெய்வ ரம்பையர் போல மகா வசீகரமாகவும் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ராஜஸ்திரீ’ போலவும் இருந்தனர். ஆதலால், அத்தனை சீமாட்டிகளால் அவ்வாறு வணங்கப்பட்டிருந்த நமது கட்டழகியான பூர்ணசந்திரோதயத்தின் மகிமை எப்படிப்பட்டது என்பது எளிதில் யூகித்துக் கொள்ளத் தக்கதன்றோ.

அந்தப் பெண்ணரசியின் உதடு அசையுமுன் அவளது மனம் இன்னதை நினைக்கிறது என்று யூகித்தறிந்து அவளது இச்சையைப் பூர்த்தி செய்யத் தகுந்த மகா விவேகிகளான அத்தனை தாதிமாரும் அவளை ஒரு தெய்வமென மதித்து வந்தனர். ஆனாலும், அவர்கள்தன்னோடு கூடவே எப்போதும் இருக்கவிடாமல், நமது பூர்ணசந்திரோதயம் அவர்களை எல்லாம் பக்கத்திலிருந்த ஒரு விடுதியில் இருக்கச் செய்திருந்ததால், பூர்ணசந்திரோதயம் இன்னதைச் செய்கிறாள், அல்லது இன்னதைப் பேசுகிறாள் என்பது மற்ற தாதிகளுக்குச் சிறிதும் தெரியாதிருந்தது. ஆனாலும், அவள் தனது சயனத்தி விருந்த ஒரு விசையை அழுத்தினால், அது தாதிகள் இருத்த விடுதியிலுள்ள ஒரு சிறிய மணியை அசைப் பதிலிருந்து