பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 39 அன்றில் பறவைகள் உலகையும் தம்மையும் கவனியாமல் சதாகாலமும் ஒன்றை யொன்று நத்திக் கலவிக் கடலிலேயே மூழ்கிக் கிடந்தன. பூர்ணசந்திரோதயம் வருவதைக் கண்டு மகிழ்ச்சி கொண்டு சிரிக்கின்றனவோ என்று எண்ணுமாறு அவ்விடத்திலிருந்த மலர்களெல்லாம் எப்போதும் இரவு பகல் தளையவிழ்ந்து விரிந்து விகசித்துத் தங்களது நறுமணத்தை அந்தச் சக்கரவர்த்தினிக்கு அற்பணமாக ஏந்தி நின்றன. அந்த மங்கையர்க்கரசியின் சித்தத்திற்கு இணங்க அவளது தாதிகள் வீணை புல்லாங்குழல் பிட்டில் ஜலதரங்கம் முதலிய கருவிகளோடு தமது தீங்குரலைப் புணர்த்தித் தெய்வகீதம் பாடினர். வேறு பலர் அவளுக்குக் கால் பிடித்தனர். மற்றும் சிலர் அவளுக்குரிய மாதுரியமான கனிவர்க்கங்களையும் பrணங்களையும் இன்னம் இதர சுகங்களையும் காலமறிந்து அப்போதைக்கப்போது வழங்கி அவளை நிகரற்ற சுவர்க்க போகத்தில் ஆழ்த்தி வந்தனர்.

அத்தகைய மகோன்னத ஸ்தானத்தில் அவ்வூர் இளவரசர் பூர்ணசந்திரோயத்தை வைத்திருந்தார். ஆனாலும், அவள் அது காரணத்தினால், சிறிதும் செருக்கடையாமலும், வரம்பு கடந்த நடத்தைகளில் இறங்காமலும், மிதமிஞ்சிய மகிழ்ச்சி அடையாமலும் அதற்கு முன்னிருந்ததைவிடப் பன்மடங்கு அதிகரிக்க கண்ணியமான நடத்தையோடும் ஒழுகி வந்தாள். அவள் தார்வார் தேசத்து மகாராஜனுக்கு நெருங்கிய பந்து வென்றும், தஞ்சை மகாராஜனுக்கும் ஒருவகையில் உறவினள் ஆதலால், அவள் விருந்தாளியாக வந்திருக்கிறாள் என்றும், அவள் அபாரமான அழகும், கல்வி முதிர்ச்சியும், கூர்மையான புத்தியும், ஸரஸகுணமும், மனோதிடமும், வாக்கு சாமர்த்தியமும், நல்லொழுக்கமும் வாய்ந்தவளாக இருப்பதால், இளவரசர் அவளையும் மணந்துகொள்ள உத்தேசிக்கிறார் என்னும் ஒரு வதந்தியை சாமளராவ் நிரம்பவும் தந்திரமாகவும் ரகசியமாகவும் பரப்பிவிட்டான். ஆகையால், அரண்மனையி