பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143 பிழம்பாகவும் காண்பவரது கண்களும் மனதும் பிரமிக்கத்தக்க

ஒப்புயர்வற்ற அபார சிருஷ்டியாகவும் வீற்றிருந்த காட்சி தேவர்களுக்கும் காணக் கிடைக்காத மகா அரிய காட்சியாக இருந்தது; அவள் தனது பணிப்பெண்களை எல்லாம் - அனுப்பிவிட்டு ஏதோகருத்தோடு ஏகாந்தத்தை நாடி இருப்பவள் போலத் தோன்றினாள். அவள் தனது மடியின்மீது ஒரு பெருத்த மதரயாழை வைத்து அதை மீட்டிப் பாட எண்ணுகிறவள்போல அதன் பிருடைகளைத் திருகிச்சுருதி கூட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும், அவளது கண் விழிகள் ஒருவித சஞ்சலத்தையும் ஆவலையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அவள் அடிக்கடி அந்த மாடத்தின் சிங்காரங்களையும் சுவரில் நாட்டப்பட்டிருந்த கடிகாரத்து முள்களின் போக்கையும் மாறிமாறிப் பார்த்த வண்ணம் இருந்தது. அதிலிருந்து அவள் ஒரு குறித்த காலத்தில் நடக்கப்போகும் ஏதோ ஒரு சம்பவத்தை நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்க்கிறாள் என்பதும், அப்போதுதான் தனது முழுத்திறமையையும் ஸாகசங்களையும் உபயோகித்து வெகு தந்திரமாக நடக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறாள் என்பதும் எளிதில் விளங்கின. அவளது பின் பக்கம், அந்த அந்தப்புரத்திற்குள் நுழையும் வாசலைப் பார்த்தபடி இருந்தது. அந்த வாசல் கண்ணாடிக் கதவினால் மூடப்பட்டிருந்தது. கருத்து அடர்ந்து நெளிந்து கணுக்கால் வரையில் நீண்டு கரும்பட்டுபோல மின்னிக் கொண்டிருந்த அவளது அற்புதமான தலைமயிர் வெகு சொகுசாகப் பின்னப் பட்டிருந்தது. ஆகையால், நிரம்பவும் விசாலமாக இருந்த அவளது ஜடை பின்பக்கத்தில் தொங்கித் தரையிலும் படிந்து வெகுதூரம் வரையில் சென்றிருந்தது. காரிருளில் தென்படும் மின்மினிக் குலம் போல அவளது பின்னலில் வைர ஜடை பில்லைகள் ஆங்காங்கு நின்று ஒளிக்கற்றையை வீசிக் கொண்டிருந்தன. ஜாதிமல்லியையும் ரோஜாப் புஷ்பமும் இணைக்கப்பட்ட கலப்பு ஸ்ரம் அந்தப் பின்னலில் நேர்த்தியாகச் சுற்றப்பட்டிருந்தது. நுட்பமான வெண்மேகம்போல இருந்த

go.3.IV-10