பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பூர்ணசந்திரோதயம்-4 சல்லாய்ப் பட்டினாலான ஆடைகள் பத்தரைமாற்றுப் பசுந் தங்கம் போல இருந்த அவனது மேனியில் அணியப்பட்டிருந்த தோற்றம் தகத்தகாயமாக ஜ்வலிக்கும் அக்கினித் தணலின் மீது இலேசான வெள்ளைப் புகை - சூழ்ந்திருப்பதுபோலத் தோன்.அது. ஆகையால், அந்தர் பட்டாடைகள் உலக அங்கங்களின் அமைப்பையும், கரவு சரிவுகளையும், உருட்ஜ் திரட்சிகளையும் மறைத்தனவோ, அல்லது, அப்படியப்படியே வெளியில் தோற்றுவித்தனவோ என்பது சந்தேககரமாய் இருந்தது. மணி சரியாக எட்டு அடித்த உடனே அவள் தனது சங்கீத கானத்தைத் தொடங்கி அன்னம்போன்ற தனது கழுத்தை ஒய்யாரமாக வளைத்து முன்னால் கவிழ்ந்து வீணையை ஏந்தித் தடவி மோகனராகத்தைப் பாட ஆரம்பித்துக் குயிலொலி போன்ற தனது குரலையும் வீணையின் நுண்ணிய ஒளியையும் ஒன்றுபடப் பொருத்திதேனோ, பாகோ, தேவாமிர்த வருஷமோ வெனமிகமிக உருக்கமாகப் பாடித்தானும் நெகிழ்ந்துருகி அந்த பளிங்கு மாடத்திலிருந்த சகலமான சராசரவஸ்துக்களும் நெக்கு விட்டிளகச் செய்து அந்த இடமே சங்கீதமாகிய சமுத்திரத்தில் மிதந்து ஆனந்தத் தாண்டவம் ஆடும் படி செய்யத் தொடங்கினாள். அவ்வாறு அவள் பாடிய காலத்தில் அவளது முன்னழகைக் காட்டிலும் பின்னழகே பதினாயிர மடங்கு சிரேஷ்டமாகக் காணப்பட்டுக் காண்போர் மனதைப்

புண்படுத்தி வதைக்கத்தக்கதாக இருந்தது.

அவ்வாறு அரைநாழிகை நேரம் பாடி ஆனந்த பரவசமடைந்து தன்னையும் உலகையும் மறந்து பிரம்மானந்த சுகத்தில் முழுகிக் கிடந்தவள் போலத் தோன்றிய அதிரூப லாவண்ணிய அற்புத குண்அணங்கான பூர்ணசந்திரோதயம் அந்த மாளிகையின் கதவை மெதுவாகத் திறந்து கொண்டு ஒரு மனிதர் உள்ளேவந்து தனக்குப் பின்புறத்தில் கால் நாழிகை நேரமாக நின்று கொண்டிருந்ததை உணர்ந்தும் உணராதவள் போல நடித்து, அதிமாதுரியமாகக் கனிந்திருந்த சரியான பக்குவ காலத்தில்